மகன் சாவில் மர்மம் இருக்கிறது என்றும் மருமகளின் தவறான நடத்தையை ஆதாரத்துடன் காரைக்குடி ஏ.எஸ்.பி-யிடம் முதியவர் ஒருவர் புகாராக அளிக்க அடக்கம் செய்யப்பட்ட லாரி ஓட்டுனரின் உடல் 15 நாள்களுக்கு பின் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரபு (வயது 36). இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும் 7-வயதில் மகனும் உள்ளார். பிரபு சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். இவரது மனைவி தீபா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி ஜெயபிரபு மாரடைப்பால் இறந்து விட்டதாக பிரபுவின் தந்தை ஆசிர்வாதம் உள்ளிட்ட உறவினர்களுக்கு தீபா தகவல் தெரிவித்துள்ளார். பிரபுவின் சொந்த ஊரான கொடுங்கா வயலுக்கு தீபாவின் உறவினரான தேவகோட்டையில் காவல்துறையில் பணியாற்றும் நபரின் காரில் இறந்த ஜெயபிரபு உடலை எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.
மகனின் சாவில் தந்தை ஆசிர்வாதத்துக்கு சந்தேகம் இருந்துள்ளது. ஏனென்றால் ஜெயபிரபு, தனக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடப்பதாகவும் திருமண வாழ்க்கை நிம்மதியாக இல்லை என தனது தந்தையிடம் கூறியுள்ளார். இந்நிலையில் ஜெயபிரபு மாரடைப்பில் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனின் செல்போனில் ஏதேனும் ஆதாரம் சிக்குமா என்று நினைத்து மருமகள் தீபாவிடம் செல்போனை கேட்டுள்ளார். செல்போன் எங்கு இருக்குன்னு தெரியலை நாளை தருகிறேன் எனக் கூறிய தீபா மறுநாள் பிரபுவின் செல்போனை ஆசிர்வாதத்திடம் கொடுத்துள்ளார்.
ஸ்மார்ட்போனை பயன்படுத்த தெரியாத ஆசிர்வாதம் சக நண்பர் ஒருவரிடம் கொடுத்து இதில் கடைசியாக மகன் யாரிடம் பேசி உள்ளார் மற்றும் வேறு எதாவது விபரம் போனில் இருக்கிறாதா என சோதனை செய்துள்ளார். அப்போது போனில் எந்த தகவலும் இல்லாமல் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜெயப்பிரபுவின் தந்தை. பின்னர் தனது நண்பரின் உதவியுடன் அழிந்து போன தரவுகளை ரெக்கவர் செய்து பார்த்த போது மருமகள் தீபா பல ஆண்களுடன் இன்ஸ்டாகிராம் , வாட்சப் மூலம் திருமணம் கடந்த தவறான தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அந்த தரவுகள் அனைத்தும் மகனின் செல்போனில் இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் உயிரிழப்பு குறித்து முழுமையாக அறிய சிவகங்கை மருத்துவ கல்லூரி பிரேத பரிசோதனை நிபுணர் , தேவகோட்டை வட்டாச்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட ஜெயபிரபு உடல் 15 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து மீண்டும் அடக்கம் செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே ஜெயபிரபு இறந்தது தற்கொலையா ? அல்லது கொலை செய்து தற்கொலை நாடகமா ? என்பது தெரிய வரும் அதன் பிறகு வழக்குப்பதிவில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. செல்போனை சில பெண்கள் தவறாக பயன்படுத்துவதால் தவறான பாதையில் சென்று தங்களது வாழ்கை சீரழித்து கொள்கின்றனர்.
செய்தியாளர்: முத்துராமலிங்கம் ( காரைக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Sivagangai