முகப்பு /செய்தி /சிவகங்கை / காதலர் தின எதிர்ப்பு.. நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியினர்!

காதலர் தின எதிர்ப்பு.. நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியினர்!

நாய்களுக்கு திருமணம்

நாய்களுக்கு திருமணம்

Sivagangai Dog marriage | காதலர் தினத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்து முன்னணியின் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Karaikkudi (Karaikudi) | Sivaganga

காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியினரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் இன்று காதலர் தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவல வாயிலில்  இந்து முன்னணியினர் இரு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அதே சமயம், காதலுக்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும் ஆனால் பொது இடங்களில் காதலர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும், அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி.

First published:

Tags: Dog, Karaikudi, Local News, Sivagangai, Valentine's day