Home /News /sivagangai /

நீட் தேர்வுக்கு எதிராக அண்ணாமலையும் குரல் கொடுக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

நீட் தேர்வுக்கு எதிராக அண்ணாமலையும் குரல் கொடுக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

தமிழக பாஜக தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு தமிழக மக்களை விட பாஜகவை பற்றி தான் அதிக கவலையாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
    “இந்தி மொழியில் நீட்தேர்வு எழுதுபவர்களுக்கு தான் அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக தலைவர்  அண்ணாமலையும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்,” என உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி வள்ளல் வி.எஸ்.சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக் கல்லூரியில் பொன்விழா ஆண்டு நிறைவு விழா மற்றும் வி.எஸ்.சிவலிங்கம் செட்டியார் சிலை திறப்பு விழா நடைபெற்றது மாவட்ட ஆட்சியர்  மதுசூதன் ரெட்டி மற்றும்  ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  உயர்கல்வி துறைஅமைச்சர் க.பொன்முடி , திரைப்பட தயாரிப்பாளர்  அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் க.பொன்முடி பேசும் போது உயர் வகுப்பு இனத்திற்கு மட்டுமே கிடைத்த கல்வி, அடித்தட்டு மக்களுக்கும் கிடைத்தற்கு பெரியார், அண்ணா, கலைஞர் தான் காரணம். ஆணும், பெண்ணும் சமமாக படிக்க வைத்தது தான் திராவிட மாடல் ஆட்சி. இருமொழி கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா. இரு மொழி கல்வி கற்பிக்கும் முறையை செயல்படுத்தியவர் கலைஞர். தாய்மொழிக்கு பிறகு உலக மொழி ஆங்கிலம் படித்தால் போதும். மூன்றாவது மொழியாக இந்தியோ, சமஸ்கிருதமோ தேவையில்லை என்றார்.

    கல்லூரிகளில் 4 செமஸ்டர்களுக்கும் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பிஏ, பிஎஸ்சிக்கு கூட நுழைவுத் தேர்வு வைக்க மத்திய அரசு சொல்கிறது. ஆனால் கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன்பு பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு இருந்தபோது கிராம மாணவர்கள் 25,000 பேர் தான் பொறியியலில் சேர்ந்தனர். கலைஞர் அந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ததும் 77,000 பேர் சேர்ந்தனர். தமிழகத்தில் நீட் தேர்வு வந்ததால் வடஇந்தியவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் மருத்துவ படிப்பில் சேருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையை தடுக்க தான் தமிழக முதல்வர் நீட்டை எதிர்க்கிறார். புதிய கல்விக் கொள்கை சரிவராது என்று தமிழகத்திற்கு என்று தனி கல்விக் கொள்கை உருவாக்க குழு உருவாக்கியுள்ளார்.

    மாணவர்கள் தொழில்முனைவோர் ஆவதற்கு ஏற்ப பாடத்திட்டங்களை துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உருவாக்க வேண்டும். அரசு கலைக் கல்லூரிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு  பேராசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.  தொடர்ந்து அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழ் , ஆங்கில வழி படித்தாலும் தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு  நீட் தேர்வுகளில் வாய்ப்பு குறைவாக இருக்கும்.  இந்தி மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அதனால் தான் நீட் தேர்வு வேண்டாம் என கூறி வருகிறோம். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்துக்கு எங்களுடன்  அண்ணாமலையும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு தமிழக மக்களை விட பாஜகவை பற்றி தான் அதிக கவலையாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

    சிவகங்கை செய்தியாளர் : முத்துராமலிஙம்
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Annamalai, Minister Ponmudi, Neet Exam

    அடுத்த செய்தி