ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சு பெரும் சர்ச்சையாகி வருகிறது. இதற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் ஆ ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும் வருகிறது. இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு நேற்று அவர் விளக்கமளித்து தான் என்ன தவறாக கூறினேன் என்பதை கூற வேண்டும் என்றார்.
இதனையடுத்து இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, தானாக உருவானது தான் இந்து மதம். கிருஷ்ணபரமாத்மா எதை கூறினாரோ அதைத்தான் திருவள்ளுவரும் கூறி இருக்கிறார்.
இந்திய நாட்டில் தற்போது நடைமுறையில் இருப்பது அம்பேத்கர் வடிவமைத்த சட்டம்தான். ஆனால் நாட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அரசியலமைப்பு சட்டம் அல்ல, சனாதன தர்மம் தான். சனாதன தர்மம் தான் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருக்கிறது.
Also Read : இந்து மதம் குறித்து ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு : கடையடைப்பில் ஈடுபட்டதாக பாஜகவினர் 17 பேர் கைது
அந்த சனாதன தர்மத்தை பற்றி பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆ.ராசா தவறாக பேசியுள்ளார். மேலும் இந்துகளுக்கு கடவுள் பக்தி இருக்க கூடாது என நினைப்பவர் தான் ஆ.ராசா. சனாதான தர்மத்தில் இந்துக்கள் சூத்திரர்கள் என்று கூறவே இல்லை. இதைப் பற்றி தொடர்ந்து ஆ.ராசா பொய்யாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெரியாரின் உலறல்களை வைத்துக்கொண்டு இந்து மதத்தை இழிவு படுத்துவதை தொடர்ந்து இனிமேலும் அனுமதிக்க முடியாது. எனவே காவல்துறை ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காரைகுடி செய்தியாளர் : முத்துராமலிங்கம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.