Home /News /sivagangai /

அர்ஜூன் சம்பத் கைது ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை - எச்.ராஜா

அர்ஜூன் சம்பத் கைது ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை - எச்.ராஜா

எச் ராஜா

எச் ராஜா

மோடி வரும் போது கருப்பு கொடி காட்டினார்கள். இப்போது அர்ஜுன் சம்பத் செய்தால் மட்டும் கைது என்பது அராஜகம் - எச்.ராஜா

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi), India
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநில விவசாய அணிதுணைத் தலைவர், எஸ் ஆர் தேவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக முன்னாள் தேசிய செயலாளர்  எச் ராஜா.  “திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வீட்டுக்கு முன்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமர் மோடி தமிழகம் வந்தார் அப்போது கோ பேக் மோடி என்று பலூன் பறக்கவிட்டனர்.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயக உரிமை என்று கூறுபவர்கள், இன்று ராகுல் காந்திக்கு எதிராக அர்ஜுன் சம்பத் கருப்புக்கொடி காட்ட சென்றபோது கைது செய்தது கடனத்திற்குரியது. ஜனநாயகத்திற்கு  விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது” எனக் கூறினார்.

    Also Read : இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது..

    ராகுல் காந்தி இந்தியா முழுவதும் காங்கிரஸை கட்சியை வலுபடுத்த, ஜூடோ யாத்திரையை இன்று தொடங்குகிறார். இதற்காக அவர் இன்று கன்னியாகுமாரி வர இருப்பதால், அவருக்கு எதிராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருப்பு கொடி கட்ட திட்டமிட்டிருந்தார். இதையடுத்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு அர்ஜுன் சம்பத் வந்து கொண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி செய்தியாளர் : முத்துராமலிங்கம்
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Arjun Sampath, Arrested, HRaja

    அடுத்த செய்தி