Home /News /sivagangai /

பள்ளி குழந்தைக்கு சான்றிதழ் வழங்க அலைய வைக்கும் அரசு இ சேவை மையம்.. ஆட்டோ ஓட்டுனர் குமுறல்..

பள்ளி குழந்தைக்கு சான்றிதழ் வழங்க அலைய வைக்கும் அரசு இ சேவை மையம்.. ஆட்டோ ஓட்டுனர் குமுறல்..

பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

Sivagangai District : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு இ சேவை மையத்தில் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பித்து பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.  தனது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்வதற்காக தொடர்ந்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள அரசு இ சேவை மையத்திற்கு சென்று கேட்கும் போது அங்கு மிஷின் வேலை செய்யவில்லை என்றும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து காரணங்களை கூறியுள்ளனர். 

மேலும் இ சேவை மைய ஊழியர் தனியார் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர். அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நான் தனியார் மையங்களில் அதிக பணம் கொடுத்து என் குழந்தைக்கு சான்றிதழ் பெறுவது எனக்கு மிகவும் கடினமான செயல் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

Also see... ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் - டிடிவி தினக்கரன்

சிவகங்கை அரசு இ சேவை மையம்


இதுபோன்று அரசு இ சேவை மையங்களில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: School, School students, Sivagangai

அடுத்த செய்தி