ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

இளைஞரின் தலையை தேடும் போலீஸ்... சிவகங்கையில் அரங்கேறிய கொடூர கொலை

இளைஞரின் தலையை தேடும் போலீஸ்... சிவகங்கையில் அரங்கேறிய கொடூர கொலை

உயிரிழந்த இளைஞன் ராம்-

உயிரிழந்த இளைஞன் ராம்-

கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலையை தீயணைப்பு படையினர் குளத்தில் தேடி வருகின்றனர். இளைஞரை கொன்றது யார்?

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 24 வயதான ராம். வியாழக்கிழமை இரவில் ராமின் செல்போனில் அவரது நண்பர் ஒருவர் பேசி, கண்மாய் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். உடனே ராமும் புறப்பட்டு இம்மநேந்தல் அருகே இருக்கும் கண்மாய் பகுதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

வெகு நேரமாகியும் ராமு வீட்டிற்கு வரவில்லை என்று ராமுவின் அண்ணன் சரத் கண்மாய்க்கு சென்று பார்த்தபோது கண்மாய் கரை அருகே ராம் சென்ற ஸ்கூட்டி ரத்தக்கரையுடன் நின்றுள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த ராமுவின் அண்ணன் உறவினரிடம் கூறவே அனைவரும் வந்து கண்மாய் முழுவதும் தேடி உள்ளார்கள். ஆனால் ‌ராமு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தலை இல்லாமால் உடல் மட்டும் கண்மாய்க்குள் தண்ணீர் அருகே சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை போலிசார் ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்.

Also see... திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் மரணம்

இன்று காலை முதல் தீயணைப்பு துறையினர் கண்மாய் தண்ணீரில் இறங்கி தலையை தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சடலத்தில் தலை இல்லாமல் இருப்பதால் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவகல்லுரியில் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இரவில் இருந்து சடலம் அரசு மருத்துவமனையின் வெளியே ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Murder, Sivagangai, Tamil News