ஹோம் /நியூஸ் /Sivagangai /

வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் விமர்சனம்

வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் விமர்சனம்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டு இந்த ஆட்சியில் இருப்பவர்கள் மீதும் உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி,மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது என்று விமர்சித்துள்ள டி.டி.வி தினகரன், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த டிடிவி தினகரன் 7வது வார்டில் கொடியை ஏற்றிவைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் எதிர்க்கட்சி யார் என்ற அதிமுகவினர் கூறிவரும் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,  அட்டகத்தி வீரர்களுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று நினைப்பதாக தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், ‘இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது. அரசாங்க மேடையில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு, திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை.

  தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல் திராவிட மாடல் என்று சொல்கிறார். திராவிட மாடல் என்றால் என்ன, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் என்று சொல்கிறாரா?

  இதையும் படிங்க: கருத்தடை ஆப்ரேசன் செய்துகொண்ட பெண் பலி.. தவறான சிகிச்சை காரணம் என புகார்

  தடுமாற்றம் தெரிகிறது இந்த ஆட்சியில், காரணம் பழனிச்சாமி கம்பெனி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் இன்று வருகிறது. விடியல் அரசு, தமிழ்நாடு விடியப் போகிறது என்றும் சொன்னார்கள். ஆனால் இன்று இருண்ட தமிழகம் தான், திமுக எப்போது வந்தாலும் தமிழகம் இருளும். இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது. இந்த ஆட்சி தடுமாறுகிறது. மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்’ என கூறினார்.

  செய்தியாளர்: சிதம்பரம் - மானாமதுரை

  Published by:Murugesh M
  First published:

  Tags: AMMK, DMK, TTV Dhinakaran