Home /News /sivagangai /

மானாமதுரை அருகே இறந்துபோன கோவில் காளை... திருவிழாவாக கொண்டாடி ஊர்வலமாக சென்று அடக்கம் செய்த கிராம மக்கள்...

மானாமதுரை அருகே இறந்துபோன கோவில் காளை... திருவிழாவாக கொண்டாடி ஊர்வலமாக சென்று அடக்கம் செய்த கிராம மக்கள்...

இறந்துபோன காளை

இறந்துபோன காளை

Manamadurai | மானாமதுரை அருகே தெய்வமாக வழிபட்டு வந்த கோவில் காளை இறந்தது. இதனை திருவிழாவாக கொண்டாடி ஊர்வலமாக சென்று கிராம மக்கள் காளையை அடக்கம் செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே  கானூர்  கிராமத்தில்  அமைந்துள்ளது சமய கருப்பனசாமி ஆலயம்.   இங்கு காளை மாட்டை மட்டுமே சிலை வடித்து சமய கருப்பண சுவாமி என்ற பெயரில் கிராம மக்கள் வணங்கி வருகின்றனர்.

இந்த கோவிலுக்காக  சுற்றுவட்டாரத்தில் உள்ள  கிராம மக்களில் வீட்டுக்கு ஒரு ரூபாய் வரை வசூலித்து பெரியவர் என்ற பெரிய சமய கருப்பணசாமி ,  சின்னவர் என்ற சின்ன கருப்பணசாமி என்ற காளை மாடு என இரண்டு காளைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த இரு காளைகளையும் கோவிலையும் வணங்கி சென்று நேத்திக்கடன் செலுத்தினால் நீதிமன்றத்தில் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் வழக்குகளுக்கு சீக்கிரம் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் வேரூன்றி உள்ளது.

இந்நிலையில் நீதியரசர் என்று அழைக்கப்பட்ட பெரியவர் சமய கருப்பணசாமி காளை மாடு வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டது. இந்த பெரியவரின்  சிறப்பு என்னவென்றால் சுற்று வட்டாரத்தில் எங்கு ஜல்லிகட்டு நடந்தாலும் முதலில் இவரை தான் வணங்கி ஜல்லிக்கட்டு களத்தில் அவிழ்த்து விடுவார்கள். கோவில் மாடு என்பதால் இதை யாரும் தொட மாட்டார்கள் பிடிக்கவும் மாட்டார்கள். இதற்கு முதல் மரியாதை செலுத்துவார்கள்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த மாடு. அது மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள அனைவரும் வீட்டில் ஒரு பிள்ளை போல் இந்த காளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில்  கிராம மக்கள் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று இரவு வரை ஒரு நாள் முழுவதும் காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கோவில் காளை இறுதி ஊர்வலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள்  பம்பை முழங்க, கரகாட்டம் மேலதாளம், ஆட்டம் பாட்டம் மற்றும் பெண்கள் குலவை இட்டு கொண்டு பாட்டு பாடி திருவிழா போல் சகல மரியாதைகளுடன் கிராமம் முழுவதும் காளையுடன் சுற்றி வந்தனர்.

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் இறந்துபோன காளை


அப்போது இந்த காளையினை தெய்வமாக வழிபட்டு கிராம மக்கள் வழி நெடுகிலும் காளைக்கு வேஷ்டி மாலை அணிவித்து வழிபட்டனர். இதனை அடுத்து காளையுடன் ஊர்வலமாக வந்த கிராம மக்கள் இறுதியாக சமயணசாமி கோவில் அருகே காளையின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Also see....பேருந்து ஜன்னல் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள்..

ஒரு மிகப்பெரிய மனிதர் இருந்தால் என்ன மரியாதை கிடைக்குமோ அதைவிட பத்து மடங்கு மரியாதையை காளைக்கு கிராம மக்கள் செலுத்தினர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Bull, Manamadurai, Sivagangai

அடுத்த செய்தி