சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுகவிற்கு 14 உறுப்பினர்களும், தமாகாவிற்கு 3 உறுப்பினர்களும், பாஜகவிற்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். இதில் 5வது வார்டு உறுப்பினராக தமாகாவை சேர்ந்த பாரத்ராஜா உள்ளார். இவரது வார்டில் தேரடி வீதி முதல் காவலர் குடியிருப்பு வரையிலான 450 மீட்டர் தூரத்திற்கு சாலை சிதிலமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது.
இந்நிலையில், இப்பாதையில் திருமண மண்டபம், கோவில் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து மேலவை உறுப்பினர் ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) அவரது நிதியில் இருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கினார். கடந்த 4 மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கியும் இன்று வரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப்பணிகள் மேற்கொள்ள இருப்பதாக பேரூராட்சி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கூறி கவுன்சிலர் பாரத்ராஜா பேரூராட்சி அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தை ஈடுபட்டார்.
மேலும், சாலைப்பணிகள் தொடங்க உத்தரவாதம் தரும் வரை இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். செயல் அலுவலர், தலைவர் என அதிகாரிகள் யாருமில்லாததால் தன்னந்தனியாக அலுவலகத்தினுள் போரட்டம் நடத்தினார். இதையடுத்து, விரைவில் பிரச்சனை தீர்வு காணப்படும் செயல் அலுவலர் தெரிவித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று கொண்டு அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : சிதம்பரநாதன் - சிவகங்கை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Sivagangai