Home /News /sivagangai /

பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. பைக்குடன் தவறி விழுந்த கொத்தனார் பலி

பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. பைக்குடன் தவறி விழுந்த கொத்தனார் பலி

பாலம் கட்டும் பணிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் விழுந்த கொத்தனார் பலி

பாலம் கட்டும் பணிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் விழுந்த கொத்தனார் பலி

சிவகங்கை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் விழுந்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கிராமத்தை சேர்ந்த சேதுராமன் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவர் சிவகங்கையில் நடைபெற்று வரும் கட்டிட வேலைக்காக தினமும் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். அதன்படி, வழக்கம்போல் கட்டிடப்பணிக்காக சென்றவர் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பனையூர் அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

இரவு நேரம் என்பதால் அவர் விழுந்தது சாலையில் செல்பவர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில், அதிகாலையில் பாலம் கட்டும் பணிக்காக வந்தவர்கள், அங்கே சேதுராமன் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்சி அடைந்துள்ளனர். பின்னர்,  சிவகங்கை தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயனைப்பு துறையினரை அழைத்து உள்ளே விழுந்து கிடந்த சேதுராமன் மற்றும் அவரது பைக்கை வெளியே எடுத்தனர். சேதுராமனை சோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முறையாக அறிவிப்பு பலகையோ, அல்லது இரவில் ஒளிரும் அபாய எச்சரிக்கை பலகையோ அங்கே பயன்படுத்தப்படாமல் இருப்பதால், இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவது சகஜமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Must Read : சகோதரி அஸ்வினி குரல்.. திமுக ஆட்சிக்கு கொடுத்த சம்மட்டி அடி - அண்ணாமலை பேச்சு

எனவே நெடுஞ்சாலைத்துறை, முறையாக அறிவிப்பு பலகைகளை வைத்து, பாலம் கட்டும் பணிகளை தொடரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலத்திற்குள் பைக்குடன் விழுந்த கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Death, Highways Department, Sivagangai

அடுத்த செய்தி