முகப்பு /செய்தி /சிவகங்கை / ’பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று பேசுவோம்.. ஆனால் கொடுக்க மாட்டோம்’ - கார்த்தி சிதம்பரம் எம்.பி சர்ச்சை பேச்சு

’பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று பேசுவோம்.. ஆனால் கொடுக்க மாட்டோம்’ - கார்த்தி சிதம்பரம் எம்.பி சர்ச்சை பேச்சு

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தேர்தலில் மகளிருக்கு 33 சதவீதம் பெண்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi), India

மகளிர் தின விழாவில், காங்கிரஸ் கட்சி மேடைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று பேசும். ஆனால் சீட் கொடுக்காது என  கார்த்தி சிதம்பரம் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாராளுமன்ற அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட சாதனைப் பெண்களைப் பாராட்டி சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசும் போது,  “காங்கிரஸ் கட்சி மேடையில் மட்டுமே 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று பேசுவோம். தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க மாட்டோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகளிருக்கு 33 சதவீதம் பெண்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்தினேன். ஆனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் பிற்போக்கு சிந்தனையுடன் உள்ளவர்கள் ஆணாதிக்கத்துடன் செயல்பட்டதால் அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். இவர்கள் யார் என்ன பின்பு தெரியப்படுத்தவேன் என தெரிவித்தார்.

ஜெயலலிதா முதலமைச்சராகவும், இந்திரா காந்தி பிரதமராகவும் இருந்த நமது நாட்டில் பெண்கள் அரசியலில் ஜெயிக்க முடியாது என்பது அபத்தமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மற்றும் காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியை சேர்ந்தவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

செய்தியாளர் : முத்துராமலிங்கம் துரைராஜ் (காரைக்குடி)

First published:

Tags: Karti Chidambaram, Reservation, Women