முகப்பு /செய்தி /சிவகங்கை / கீழடி அருங்காட்சியகம்... இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கீழடி அருங்காட்சியகம்... இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Madurai Visit | மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

’கள ஆய்வில்’ முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள வளர்ச்சி பணிகள், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், 3 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Also Read: எவ்வளவு முயன்றாலும் உங்களால் கூட்டணியை உடைக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

அதனைதொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அங்கிருந்து நாகர்கோவில் செல்லும் முதலமைச்சர், தோள்சீலைப் போராட்டத்தின் 200 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். இவ்விழாவில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனும் பங்கேற்கிறார்.

First published:

Tags: CM MK Stalin, Keeladi, Madurai