Home /News /sivagangai /

நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் புகைப்படத்துடன் பேனர்... சிவகங்கை நகராட்சி நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை

நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்களின் புகைப்படத்துடன் பேனர்... சிவகங்கை நகராட்சி நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை

நகராட்சி நகர்மன்ற தலைவர்

நகராட்சி நகர்மன்ற தலைவர்

ரூ. 5 கோடிக்கு மேல் பொதுமக்களும், வணிகர்களும் வரி பாக்கி வைத்துள்ளதால் அடிப்படை வசதி கூட செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் இருந்து வருவதாக நகராட்சி நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Sivaganga | Tamil Nadu | Sivaganga
    சிவகங்கை நகராட்சியில் 5 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்தாததால், வளர்ச்சி திட்டபணிகள், அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.

    சிவகங்கை நகராட்சியில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களும், வணிகர்களும் வரி பாக்கி வைத்துள்ளதால் அடிப்படை வசதி கூட செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் இருந்து வருவதாக நகராட்சி நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சிவகங்கை நகராட்சியில் சொத்து வரி பாக்கி ரூ. 2.77 கோடி, தொழில் வரி பாக்கி ரூ. 34.93 லட்சம், குடிநீர் கட்டணம் பாக்கி ரூ. 1.03 கோடி, கடை வாடகை பாக்கி ரூ. 26.48 லட்சம், பாதாளச் சாக்கடை கட்டணம் பாக்கி ரூ. 19 லட்சம்  என ரூ.5 கோடி வரை வரி பாக்கியால்  நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அடிப்படை வசதிகளை கூட செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் இருப்பதாகவும் வரி பாக்கி செலுத்தாதவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அதை பொருட்படுத்தாமல், பொதுமக்களும் வணிகர்களும் இருந்து வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், செப்டம்பர் 30-க்குள் பாக்கியை செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் சொத்து வரியை செலுத்தாத வீடுகள்  ஜப்தி செய்யப்படும். குடிநீர் கட்டணம் செலுத்தாதோருக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.   வரி பாக்கி செலுத்தாதவர்களின் புகைப்படங்களை ஆங்காங்கே பிளக்ஸ் பேனர் மூலம் வைத்து விளம்பரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

    ALSO READ | பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா; ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாள் இதோ

    மேலும் நகராட்சி வளர்ச்சிப் பணிக்காக அரசிடம் ரூ.50 கோடி கோரப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.5 கோடியில் தெப்பக்குளத்தில் தடுப்புச் சுவர், நடைபாதை அமைக்கப்படும். வறட்சிக்காலங்களில் தண்ணீர் கிடைக்கும் வகையில் ராட்ச போர்வெல்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Municipal labors, Property tax, Sivagangai

    அடுத்த செய்தி