ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

ஜல்லிகட்டு காளை, சண்டை  கிடா, கன்னி நாய்.. எல்லாம் தங்கச்சிக்காக... வித்தியாசமான சீதனம் வழங்கிய அண்ணன்!

ஜல்லிகட்டு காளை, சண்டை  கிடா, கன்னி நாய்.. எல்லாம் தங்கச்சிக்காக... வித்தியாசமான சீதனம் வழங்கிய அண்ணன்!

 திருமணத்திற்கு வினோத சீதனம் வழங்கிய அண்ணன்

திருமணத்திற்கு வினோத சீதனம் வழங்கிய அண்ணன்

மானாமதுரையில் நேற்று நடந்த தங்கையின் திருமணத்தில் தங்கைக்கு பிடித்த பார்த்து வளர்த்த கன்னி நாய்கள், ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடாக்களை திருமணத்தன்று தங்கைக்கு சீதனமாக வழங்கி பாசக்கார அண்ணன் அசத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Manamadurai, India

ஒரு வீட்டில் அண்ணன் தங்கை இருந்தால் சிறுவயது முதலே இருவரும் அவ்வப்போது சண்டை போட்டு இருக்கலாம். ஆனால் எப்போதும் பாசத்திற்கு குறை இருக்காது. அந்த வகையில் மானாமதுரையில் தங்கையின் திருமணத்தில் தங்கை ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி கொடுத்து ஒரு அண்ணன் அசத்தியுள்ளர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சுரேஷ் _செல்வி தம்பதியரின் மகளான விரேஸ்மாவிற்கு நேற்று திருமண நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விரேஸ்மாவின் அண்ணன் ராயல் என்பவர் சிறுவயது முதல் தன்னுடைய வீட்டில் வளர்த்த ஜல்லிகட்டு காளை, சண்டை  கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றை பாசத்துடன் பார்த்து பார்த்து வளர்த்து வந்துள்ளார்.  குறிப்பாக அவருடைய தங்கை அதிகமாக நேரம் செலவழித்து பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.

காலபோக்கில் ஜல்லிக்கட்டு மாடு சண்டை  கிடா ஆகியவை இறந்து போனதால் கன்னி நாய்கள், சண்டை சேவல் இருந்து வந்தது. இந்வந்த நிலையில் நேற்று தங்கைக்கு நடந்த திருமண மண்டபத்தில் ஜல்லிகட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள் , சண்டை சேவல் ஆகியவற்றை திருமண மண்டபத்தின் மேடையேற்றி போட்டோ எடுத்து கொண்டும் கன்னி நாய்கள், சண்டை சேவல்களை மற்ற சீதனங்களோடு சேர்த்து  சீதனமாக வழங்கி தங்கையின் ஆசைகளை நிறைவேற்றி தங்கையை வழி அனுப்பி வைத்தார் .

Also see... சினிமா பாணியில் தாத்தாவின் நினைவுகளை தேடி லண்டனில் இருந்து வந்த பேரன் 

திருமணத்திற்கு வந்தவர்கள் அண்ணன் தங்கை பாசத்திற்கு எப்போதும் அளவில்லை என பேசிச் சென்றனர்.

First published:

Tags: Marriage, Sivagangai