ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் - மாணவிகள் முன்பு கீழே விழுந்து பல்பு வாங்கிய சோகம்

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் - மாணவிகள் முன்பு கீழே விழுந்து பல்பு வாங்கிய சோகம்

இளைஞர்கள் பைக் சாகசம்

இளைஞர்கள் பைக் சாகசம்

Sivagangai District | காரைக்குடி கல்லூரி சாலையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது அதில் ஒருவர் மாணவிகள் முன்பு கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

காரைக்குடி கல்லூரி சாலையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது அதில் ஒருவர் மாணவிகள் முன்பு கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் கல்லூரி மாணவிகளை  கவர்வதற்காகவும், அவர்களை திரும்பி பார்க்க வைப்பதற்காகவும்  இளைஞர்கள், மாணவர்கள் விலை உயர்ந்த ரேஸ் பைக் மூலம் சாகசங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு சிலர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையிலும் இதுதொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், கல்லூரி சாலையில்  அழகப்பா அரசுகலைக்கல்லூரி பேருந்து நிறுத்தம்  அருகில் அழகப்பாபுரம் காவல் நிலையம் எதிரில் ரேஸ் பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் கல்லூரி மாணவிகளை கவர்வதற்காகவும், அவர்களை திரும்பி பார்க்க வைக்கவும் புதுப்புது விதங்களில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்  பைக்கில் பின்னால் அமர்ந்த இளைஞர் பைக்கில் இருந்து எழுந்து நின்று டைட்டானிக் படத்தில் ஹீரோ கப்பலில் கையை விரித்து காண்பிப்பது போல வேகமாக பைக்கில் ஏறி நின்று  சாகசம் செய்ய நினைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவிகள் முன்பே கீழே விழுந்து பல்பு வாங்கினார்.  இந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கணவர் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்ற மனைவி!

இதேபோல் கடந்த ஜனவரி மாதம் இளைஞர்கள் கல்லூரி சாலையில் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட  இரு இளைஞர்களை மீது  போலீசார் வழக்குபதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். பைக் சாகசம் செய்யும் இளைஞர்களை போலீசார் கைது செய்தாலும், காரைக்குடி  கல்லூரி சாலையில் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

செய்தியாளர் : முத்துராமலிங்கம்

Published by:Karthi K
First published:

Tags: Local News, Sivagangai