Home /News /sivagangai /

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த பாஜக தலைவர் ஜேபி நட்டா!

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த பாஜக தலைவர் ஜேபி நட்டா!

ஜேபி நட்டா

ஜேபி நட்டா

மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India
    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக  தமிழ்நாடு வந்தார். மதுரை மற்றும் காரைக்குடியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இந்நிலையில், நேற்று  திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்ற அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுத்த பின், கோயிலில் அவர் விநாயகரை தரிசித்தார். மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



    இதைதொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்த சாக்கோட்டை தெற்கு ஒன்றிய மண்டல பாஜக தலைவர் ராமலிங்கம் என்பவரது வீட்டில் ஜே.பி.நட்டா காலை உணவு அருந்தினார். மாநில நிர்வாகிகளுடன் தரையில் அமர்ந்து வாழை இலையில் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Annamalai, BJP, JP Nadda

    அடுத்த செய்தி