சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவிகளுக்கு முன்பாக பைக் சாகசத்தில் ஈடுப்பட்ட மாணவருக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நூதன தண்டனையை கொடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வாசலிலையே பேருந்து நிறுத்தமும், அழகப்பாபுரம் காவல் நிலையமும் உள்ளது. கல்லூரி முடிந்து கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் கூட்டமாக பேருந்திற்காக காத்திருப்பது வழக்கம்.
இதற்கிடையில், அப்படி காத்திருக்கும் மாணவிகளை கவர்வதற்காக சில இளைஞர்கள் கல்லூரி சாலையில் அடிக்கடி சாகசத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : சட்னியில் பல்லி... ஓட்டலில் சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி..!
இதே பாணியில் கடந்த மாதம் மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு முன்பாக சாகசம் செய்யும் வீடியோ வைரல் ஆனது.
அந்த வீடியோவில் சாலையில் பேருந்திற்காக நின்றுக்கொண்டிருந்த மாணவிகளிடம் கெத்துக்காட்டுவதாக, பைக்கின் பின் இருக்கையில் இருந்த மகேஷ்வரன் எழுந்து நின்றக முயன்றுள்ளார். ஆனால் அவர் நிலைதடுமாறி கிழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சாகசத்தில் ஈடுபட்ட 19 வயது கல்லூரி மாணவர் மகேஷ்வரனை பிடித்து விசாரித்தனர். இதையடுத்து மாணவர் முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க : கீழடி அகழ் வைப்பகம் பணிகள் மும்முரம்... ஜனவரி மாதத்தில் திறக்க ஏற்பாடு
இதை விசாரித்த நீதிமன்றம், சகாசம் செய்த இடத்திலேயே 7 நாட்களுக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டுமென நூதன தண்டனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து மகேஷ்வரன் இன்று கல்லூரி முன்பு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike race, Sivagangai