உலகமெங்கிலும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒரு சில அமைப்பினர் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விநோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. சிவகங்கை பேருந்து நிலையத்தில் மேலூர் அருகே வலைச்சேரிபட்டியை சேர்ந்த எஸ்.பி.சரவணன் என்பவர் காதலர் தினத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். நாகரிகம், கலாச்சார சீரழிவுக்கு காதலர் தினம் வழி வகுக்கிறது எனக் கூறி பேருந்துக்கு காத்திருந்த மாணவ மாணவியருக்கு முன்பாக கழுத்திலும் கைகளிலும் பதாகைகளை ஏந்தி பரப்புரை மேற்கொண்டார்.
பேருந்து நிலையம் முழுவதும் சுற்றி வந்த அவர் பண்பாடு, கலாசாரம். நாகரீகத்தை பாதுகாக்க வேண்டும், தனி மனித ஒழுக்கம், மனக்கட்டுப்பாட்டுடன் இளம் தலைமுறையினர் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். காதலர் தினம் என்ற பெயரில் நம் பாரம்பரிய கலாசாரத்தினை சிதைத்து, வருங்கால சந்ததியினர்களுக்கு மோசமான வழி காட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 14 உலக காதலர் தினத்தினை நம் பண்பாடு, கலாச்சார, நாகரிகங்களை பாதுகாக்கும் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு செய்ய வேண்டும் காதலர்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் எஸ்.பி.சரவணன் வலியுறுத்தினார். மேலும் தனது பதாகையில், “வாகனம் கட்டுப்பாட்டை இழந்தால் விபத்து, காதலர்கள் மனக்கட்டுப்பாட்டை இழந்தால் ஆபத்து.. காதலிக்கும் காலத்தில் காதலர்கள் விலகி இருப்பது தன்மானம், இணைந்து இருப்பது காதலுக்கு அவமானம்” என்ற வாசகங்களையும் வைத்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lovers day, Sivagangai, Valentine's day