ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் - வேலூர் இப்ராஹிம்!

இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் - வேலூர் இப்ராஹிம்!

வேலூர் இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம்

இந்துக்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்தக் கூடிய திமுக எம்பிகளுக்கு ஜனநாயக ரீதியாக அவர்களை திருப்பி அடிக்கக் கூடிய வேலையை பாஜக செய்யும் என வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sivaganga | Sivaganga | Karaikkudi (Karaikudi) | Tamil Nadu

  தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் முக்கிய மாற்றம் நிகழவுள்ளதாக பாஜக தேசிய சிறுபான்மையின பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பேசிய பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் அனைத்து சமூக மக்களையும் மதங்களையும் சமத்துவமாக நேசிக்க கூடிய கட்சி பாஜக என்றும், இஸ்லாமியர்களை அரவணைத்துதான் இந்த தேசத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆர் எஸ் எஸ்-இன் கொள்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

  மேலும், வாக்கு வங்கிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், தீவிரவாத வன்முறையாளர்களாகவும் மாற்றும் முயற்சியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், இஸ்லாமியர்களை கல்வி கற்க விடாமல் இந்த அமைப்புகள் இடையூறு செய்கின்றன , பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும் என கூறியுள்ளார்.

  பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ சோதனைகளால் இஸ்லாமிய மக்களுக்கு எந்தவித பின்னடைவும் கிடையாது. இஸ்லாமியர்கள் பாஜகவின் நோக்கத்தையும் கொள்கைகளையும் புரிந்து கொண்டு அவர்களாகவே இணைந்து வருகிறார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு காவல்துறை மூலம் எங்களை நெருங்குவதாக தெரிவித்துள்ளார்.

  ALSO READ | ’அவருக்கு வரலாறும் தெரியல ; அரசியலும் தெரியல’ - அண்ணாமலையை சாடிய அமைச்சர் பொன்முடி..!

  இந்துக்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்தக் கூடிய செந்தில் குமார் எம்பி, ஆ.ராசா எம்.பி போன்றோருக்கு திமுக அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. விரைவில் ஜனநாயக ரீதியாக அவர்களை திருப்பி அடிக்கக் கூடிய வேலையை பாஜக செய்யும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்திலும் தேசிய அளவிலும் பாஜக இடம் பிடிக்கும் என கூறியுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: BJP, Sivagangai