ஹோம் /நியூஸ் /Sivagangai /

திருப்புவனத்தில் இரட்டை கன்று ஈன்ற நியூசிலாந்து ரக பசு - விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்புவனத்தில் இரட்டை கன்று ஈன்ற நியூசிலாந்து ரக பசு - விவசாயிகள் மகிழ்ச்சி

ஒரே பிரசவத்தில் இரட்டை கன்று

ஒரே பிரசவத்தில் இரட்டை கன்று

Sivagangai : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நியூசிலாந்து நாட்டு ரக பசு மாடு ஒரே பிரசவத்தில் இரட்டை பசுங்கன்றுகளை ஈன்றிருப்பது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் செல்லப்பனேந்தல், மணல் மேடு, பெத்தானேந்தல், கீழடி, கொந்தகை, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் கறவை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனத்தில் இருந்துதான் அதிகளவு பால் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் பலரும் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு இன மாடுகளை வாங்கி வளர்ப்பது வழக்கம்.

அந்த வகையில், திருப்புவனம் சேதுபதி நகரைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் 15க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் பால் கறவையை அதிகப்படுத்த நியூசிலாந்து நாட்டு ரகமான ஹெச் எப் என்ற ரக மாட்டை வாங்கி வளர்த்து வந்தார்.

' isDesktop="true" id="772129" youtubeid="pQyBUU550ko" category="sivagangai">

நாட்டு மாட்டுடன் கலந்ததால் முதல் பிரசவத்தில் ஒரே ஒரு கன்று ஈன்றது. பின் இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பசுங்கன்றுகளை ஈன்றுள்ளது. விவசாயிகள் பசுமாடுகள் பிரசவத்தில் காளை மாடுகளை ஈன்றால் வருத்தப்படுவார்கள், அதிலும் இரட்டை மாடுகள் பசு மாடுகள் என்பதால் விவசாயி பூமிநாதன் மிகுந்த மகிழ்ச்சியில்  உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியூசிலாந்து நாடு குளிர் பிரதேசம் என்பதால் இந்த ரக மாடுகள் தினசரி 100லிட்டர் வரை கறக்கும் திறன் கொண்டது என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் அதற்கான சூழலை உருவாக்கினால் பால் அதிகளவு கறக்கும்.  தற்போது 25 முதல் 40 லிட்டர் வரையே கறக்கும் திறன் கொண்டதாக உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கால்நடை வளர்ப்பில் புதுமையை புகுத்தினால் இன்னமும் பால் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Must Read : எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை

இந்நிலையில், இரட்டை கன்று ஈன்ற பசுவையும் கன்றுகளையும் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர். 

First published:

Tags: Cow, Cow Milk, Farmers, Sivagangai