Home /News /sivagangai /

ஒரே நாளில் அரசு பள்ளி மாணவி, தனியார் பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி... சிவகங்கையில் பரபரப்பு

ஒரே நாளில் அரசு பள்ளி மாணவி, தனியார் பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி... சிவகங்கையில் பரபரப்பு

பள்ளியில் விசாரணை செய்யும் போலீஸ்

பள்ளியில் விசாரணை செய்யும் போலீஸ்

Sivaganga | 0ம்வகுப்பு  அரசுப்பள்ளி மாணவி தற்கொளை முயற்சி செய்துள்ளார். அதுபோல தனியார் பள்ளி மாணவர் வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவங்கள் சிவகங்கை மாவட்டத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த
மாணவி  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் சமூக அறிவியல் தேர்வு நடக்க இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தேர்வுக்கு தன்னை சரியாக தயார் படுத்திக் கொள்ளவில்லை என்ற கவலையில் மாணவி இருந்துள்ளார்.

அந்த பயத்தில் பள்ளி கழிவறைக்குள் சென்று தனது கை நரம்பை அறுத்துள்ளார். அதை பார்த்த சக மாணவிகள்  சத்தம் போட்டுள்ளனர்.  மாணவிகள் இது குறித்து ஆசிரியரிடம் சென்று கூறியுள்ளனர். உடனே அந்த மாணவி அங்கிருந்து ஓடி வந்து பள்ளியின் இரண்டாவது தளத்திலிருந்து குதித்துள்ளார்.

இதில் அவரது காலில் எலும்பு  முறிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டது.

Also see... சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய அரசுப் பள்ளி

பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதே போல் திருப்புவனம் மெட்ரிக் பள்ளியில் பயின்றுவரும்  மாணவர் ஒருவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவர் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  ஒரே நாளில் மாணவனும், மாணவியும் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Government school, School students suicide, Sivagangai, Suicide attempt

அடுத்த செய்தி