Home /News /sivagangai /

75வது சுதந்திர தினம் : தேசிய கீதத்தை பிழை இல்லாமல் பாடி அசத்தும் 3வயது சிறுவன்..! - வைரலாகும் வீடியோ

75வது சுதந்திர தினம் : தேசிய கீதத்தை பிழை இல்லாமல் பாடி அசத்தும் 3வயது சிறுவன்..! - வைரலாகும் வீடியோ

தேசிய கீதம் பாடும் சிறுவன்

தேசிய கீதம் பாடும் சிறுவன்

Independence Day 2022: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ உடையில் சிறுவன் ஒருவன்  தேசிய கீதத்தை பிழையில்லாமல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மூன்று வயதில் தேசிய கீதத்தை தவறுகள் இல்லாமல்  பாடும் சிறுவனின் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இந்தியா  சுதந்திர தினத்தை கொண்டாடப்படும் வேளையில் சிறுவன் ஒருவன் ராணுவ உடையில் தேசிய கீதத்தை பிழைகள் இல்லாமல் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி - நந்தினி  தம்பதியினரின் மூன்று வயது மகன் மாயன்.  இச்சிறுவன் 2வயது இருக்கும் போதே   தமிழ் எழுத்துக்கள் 247 ,உலக நாடுகளின் தேசிய கொடிகள், உலக நாடுகளின் தலைநகரங்கள்  சரியாக கூறி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்  இடம்பெற்றுள்ளார்.

Also Read:  75வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்

இந்நிலையில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ உடையில்  தேசிய கீதத்தை பிழையில்லாமல் பாடி அசத்தியுள்ளார். சிறுவன் மழலை மொழியில் தேசிய கீதத்தை பாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. சிறுவனுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Independence day

அடுத்த செய்தி