ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

காரைக்குடியில் சரக்கு வாகனத்தை வழிமறித்து ரூ.11 லட்சம் கொள்ளை... 3 பேர் கைது...

காரைக்குடியில் சரக்கு வாகனத்தை வழிமறித்து ரூ.11 லட்சம் கொள்ளை... 3 பேர் கைது...

3 பேர் கைது

3 பேர் கைது

Karaikkudi | காரைக்குடியில் சரக்கு வாகனத்தை வழிமறித்து விற்பனையாளர் , ஒட்டுநரை தாக்கி ரூ.11 லட்சம் கொள்ளையடித்தவர்களை போலீசார் கைது செய்தனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karaikkudi (Karaikudi), India

  காரைக்குடியில் தனியார் சிகரெட் ஏஜென்சியில் பணிபுரியும் விற்பனையாளர் விக்னேஸ்வரன் (27), ஓட்டுநர் தமிழரசன் (27) ஆகிய இருவரும் கடந்த 6-ம் தேதி சரக்கு வாகனத்தில், கல்லல், மானகிரி, கானாடுகாத்தான், பள்ளத்தூர்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சிகரெட் பண்டலை வினியோகித்தனர்.

  பின்னர் கடைகளில் வசூலான ரூ.11 லட்சத்துடன் காரைக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அழாகாபுரி அம்பேத்கர் நகர் அருகே வந்துக் கொண்டிருந்தவர்களை கருப்பு நிற காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை வழிமறித்து  ஒட்டுநர் மற்றும் விற்பனையாளரை வெட்டிவிட்டு ரூ.11லட்சத்தை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றது.

  Also see... சென்னையில் துப்பாக்கி முனையில் 2 கொள்ளையர்கள் கைது

  இதுகுறித்து பள்ளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.பின்னர்  குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த தனிப்படை போலீஸார், கொள்ளையில் ஈடுபட்ட கரூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (25), கிஷோர்குமார் (22) சிகரெட் கம்பெனி முன்னாள் ஊழியர்  காரைக்குடி செஞ்சையைச் சேர்ந்த அன்வர்சலீம் (26) ஆகிய மூவரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்த கார் மற்றும் ரூ.65,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.

  செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Crime News, Karaikudi