ஹோம் /நியூஸ் /சிவகங்கை /

உயிர்காக்க வேண்டிய 108 வாகனமே 3 உயிர்களுக்கு எமனாக மாறிய சோகம்..!

உயிர்காக்க வேண்டிய 108 வாகனமே 3 உயிர்களுக்கு எமனாக மாறிய சோகம்..!

சாலை விபத்து

சாலை விபத்து

Sivagangai | சிவகங்கை அருகே கர்ப்பிணி பெண்ணை ஏற்றிவந்த 108 வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண்ணின் தாயார், வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது. 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்துள்ள நெஞ்சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன், நிவேதா தம்பதி. நிவேதா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிவேதா அவரது தாயார் விஜயலெட்சுமி மற்றும் நிவேதாவின் சகோதரி திருச்செல்வி ஆகியோர் 108 வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

108 வாகனத்தை மலையரசன் என்கிற ஓட்டுநர் மற்றும் டெக்னிசியன் சத்யா ஆகியோர் இயக்கிவந்த நிலையில் ஊத்திகுளம் அருகே வரும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மற்றொரு 108 வாகனம் வரவழைக்கப்பட்டு அனைவரையும் அழைத்து சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பிணி பெண் நிவேதா அவரது தாயார் விஜயலெட்சுமி ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவித்ததுடன் நிவேதாவின் வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தையும் உயிரிழந்தது.

' isDesktop="true" id="822445" youtubeid="9DubebTJCrQ" category="sivagangai">

மேலும் நிவேதாவின் சகோதரி திருச்செல்வி மற்றும் ஓட்டுநர் மலையரசன், டெக்னிசியன் சத்யா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Also see... காட்டு பகுதியில் கணவர் மர்ம மரணம்.. மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் கரப்பிணி பெண், அவரது வயிற்றில் இருந்த சிசு மற்றும் அவரது தாயார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Ambulance, Dead, Pregnancy, Road accident, Sivagangai