முகப்பு /செய்தி /சிவகங்கை / தேவகோட்டை : தாய், மகள் கொலை வழக்கில் 55 நாட்களுக்கு பிறகு 3 பேர் கைது..!

தேவகோட்டை : தாய், மகள் கொலை வழக்கில் 55 நாட்களுக்கு பிறகு 3 பேர் கைது..!

கொலையானவர்கள்

கொலையானவர்கள்

Crime News : தேவகோட்டை அருகே தாய், மகள் கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அதே ஊரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்த கனகம், அவரது மகள் வேலுமதி மற்றும் வேலுமதியில் மகன் மூவரசு(12) ஆகிய 3 பேரை கடந்த 10.01.2023 இரவு மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர். பின்னர் வீட்டில் வைத்திருந்த 46 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் வேலுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கனகம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிறுவன் மட்டும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த இரட்டை கொலை வழக்கில் தடயங்கள் எதுவும் சிக்காத நிலையில் காரைக்குடி போலீஸ் ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன்படி 55 நாட்களுக்கு பிறகு அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (எ) ரமேஷ்குமார், விஜி (எ) விஜயகுமார் மற்றும் சுரேஷ் (எ) வெள்ளைச்சாமி ஆகிய 3 பேர் உள்ளிட்ட 5 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் தங்க மோதிரங்கள், வெள்ளி பொருட்கள் சிலவற்றை மட்டும் போலீசார் கைப்பற்றினர். மேலும் கொடூரமாக கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு ராடையும் அவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். மேலும் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் தலைமறைவான நிலையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் : முத்துராமலிங்கம் - காரைக்குடி

First published:

Tags: Crime News, Local News, Sivagangai