Home » News » Shows

திமுகவும் கருப்பர் கூட்டமும், கர்ணனும் கவச குண்டலம் போல - அமைச்சர் ஜெயகுமார்

கர்ணனும் கவச குண்டலமும் ஒட்டிப் பிறந்தது போல் திமுக-வையும் கருப்பர் கூட்டத்தையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவும் கருப்பர் கூட்டமும், கர்ணனும் கவச குண்டலம் போல - அமைச்சர் ஜெயகுமார்
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, திமுக இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது.

திமுக இந்து மத விரோக கட்சி என பாஜக தொடர் குற்றசாட்டு வைக்கும் நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் விநாயகர் சிலை படத்தை பகிர்ந்தது திராவிட சிந்தாந்தவாதிகள் மத்தியில் சர்சையை கிளப்பியது.

அதே போல் கந்தசஷ்டி விவகாரத்தில் திமுக நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது

இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், கர்ணனும் கவச குண்டலமும் ஒட்டிப் பிறந்தது போல் திமுக-வையும் கருப்பர் கூட்டத்தையும் பிரிக்க முடியாது என்றார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓட்டுக்காக நிறத்தை மாற்றுகிறார்கள் திமுக. நிறம் மாறுபவர்களுக்கு மக்கள் தகுந்த பதில் கொடுப்பார்கள். நிறம் மாறும் கட்சி அதிமுக அல்ல, அதிமுகவை பொருத்தவரை எம்மதமும் சம்மதம், மதங்களையும் மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக்கூடாது என்றார்.

 
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading