பல்கலைக்கழக நிகழ்வில் திடீரென்று மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்..!

நிகழ்ச்சியின்போது உடல் வெப்பம் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்த காரணங்களால் நிதின் கட்கரி மயங்கிவிழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 4:05 PM IST
பல்கலைக்கழக நிகழ்வில் திடீரென்று மயங்கி விழுந்த மத்திய அமைச்சர்..!
மயங்கி விழுந்த நிதின் கட்கரி
Web Desk | news18
Updated: December 7, 2018, 4:05 PM IST
மஹாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகர் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென்று மயங்கிவிழுந்தார். அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகர் மாவட்டத்திலுள்ள மகாத்மா பூலே கிரிஷி வித்யாபீத் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றிருந்தார்.

அப்போது, விழாவில் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தது. அப்போது, சக விருந்தினர்களுடன் இணைந்து தேசிய கீதத்துக்கு மரியாதை அளிக்கும் விதமாக எழுந்து நின்றுக் கொண்டிருந்தார் நிதின் கட்கரி.

அப்போது, திடீரென்று நிலை தடுமாறிய அவர், மயங்கிவிழுந்தார். அப்போது, அருகில் நின்ற மஹாராஷ்டிரா ஆளுநர் சி.வித்யாசாகர ராவ் அவரை கீழை விழாமல் பிடிக்க முயற்சி செய்தார். உடனே, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தற்போது, அவரது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிதின் கட்கரியின் ட்விட்டர் பக்கதில், ’நிகழ்ச்சியின்போது உடல் வெப்பம் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தது ஆகிய காரணங்களால் நிதின் கட்கரி மயங்கிவிழுந்தார். வளாகத்தில் இருந்த மருத்துவர்கள் தேவையான சிகிச்சை அளித்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: December 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்