சரத் யாதவ் கருத்தால் வேதனையடைந்துள்ளேன்..! ராஜஸ்தான் முதல்வர் புகார்

‘வசுந்தராவுக்கு ஓய்வு கொடுங்கள். அவரைப் பார்த்தால் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவர் மிகவும் குண்டாக இருக்கிறார்’ என்று சரத் யாதவ் பேசியிருந்தார்.

news18
Updated: December 7, 2018, 5:36 PM IST
சரத் யாதவ் கருத்தால் வேதனையடைந்துள்ளேன்..! ராஜஸ்தான் முதல்வர் புகார்
வசுந்தரா ராஜீ சிந்தியா
news18
Updated: December 7, 2018, 5:36 PM IST
எனது உடலமைப்பு குறித்து விமர்சனம் செய்த சரத் யாதவ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஐனதா தள கட்சியின் முன்னாள் தலைவரும் சரத் யாதவ் வசுந்தரா ராஜே சிந்தியா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பிரச்சாரத்தின்போது பேசிய சரத்யாதவ், ‘வசுந்தராவுக்கு ஓய்வு கொடுங்கள். அவரைப் பார்த்தால் மிகவும் சோர்வாக இருக்கிறார். அவர் மிகவும் குண்டாக இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

பெண்ணின் உடல் குறித்து சரத் யாதவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவித்த வசுந்தரா ராஜே சிந்தியா, ‘எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நான் அவமானப்படுத்தப்பட்டது போல உணர்கிறேன். தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து முன்னுதாரணமாக இருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

சர்ச்சைக் கருத்து குறித்து தெரிவித்த சரத்யாதவ், ‘எனக்கு, வசுந்தராவுடன் பழைய நட்பு உள்ளது. நான் அதனை நகைச்சுவையாகத் தான் கூறினேன். எந்த வகையிலும் தரக்குறைவாகக் கூறவில்லை. எனக்கு அவரைக் காயப்படுத்தவேண்டும் என்று எந்த உள்நோக்கமும் இல்லை. நான், அவரைச் சந்தித்தபோது கூட உங்களுக்கு எடை போட்டுவிட்டது என்று தெரிவித்திருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

எனினும், சரத்யாதவ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, சரத்யாதவ் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வருடம், ‘ஓட்டையும், பெண் குழந்தைகளையும்’ ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதேபோல, 2015-ல் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தென்னிந்திய பெண்களின் மாநிறம் குறித்தும் பேசி கண்டனங்களை வாங்கிக்கொண்டார்.

Also see:

First published: December 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்