Home /News /salem /

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது - சேலத்தில் பரபரப்பு

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது - சேலத்தில் பரபரப்பு

கொலையாளி கைது

கொலையாளி கைது

Salem : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞர் சோளக்காட்டில் பதுங்கியிருந்தபோது பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும் நந்தினி, ரோஜா என்கிற இரண்டு மகள்களும் விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார். முருகேசனின் இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ, தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை, கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரையின் வீட்டிற்கு சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்துள்ளார். பின்னர் மாணவியை ஒரு தலை பட்சமாக இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி மாணவியின் ஊருக்கு சென்ற சாமிதுரை பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது மாணவியை காதலிக்க வலியுறுத்தி கட்டாய படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், விவசாயி முருகேசனின் மூத்த மகள் நந்தினியின் திருமணம் வருகிற 13ம் தேதி நடைபெற இருந்த நிலையில், முருகேசன் அவரது மனைவி இருவரும் திருமண அழைப்பிதழ் வழங்க உறவினர் வீட்டிற்கு வெளியூர் சென்றுள்ளனர். இதையறிந்த சாமிதுரை தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8ம் தேதி ரோஜாவின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் எனக்கூறியுள்ளார்.

இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சாமிதுரை, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ரோஜா மீதும் அவரது அக்கா நந்தினி மீதும் ஊற்றியுள்ளார். பின்னர் இருவரும் சுதாரித்து கொண்ட நிலையில் ரோஜாவை கீழே தள்ளிய சாமிதுரை, தனது நண்பர்கள் உதவியுடன் ரோஜாவின் கழுத்தில் காலை வைத்து மிதித்து தலையில் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பதுங்கியிருந்த கொலையாளியை பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்


இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நான்கு தனிப்படைகளை அமைத்த போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.

Must Read : ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை சட்டம்? ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பரிந்துரை குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், கூடமலை அருகே சோளக்காட்டில் (விவசாய வயலில்) பதுங்கியிருந்த கொலையாளி சாமிதுரையை அப்பகுதி பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர், இதனை தொடர்ந்து சாமிதுரையை, கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: College girl, Crime News, Murder, Salem

அடுத்த செய்தி