ஹோம் /நியூஸ் /சேலம் /

இறைச்சி கடையில் தீபாவளி போனஸ் கேட்டு இளைஞர்கள் அடாவடி - சேலத்தில் நடந்த பகீர் சம்பவம்!

இறைச்சி கடையில் தீபாவளி போனஸ் கேட்டு இளைஞர்கள் அடாவடி - சேலத்தில் நடந்த பகீர் சம்பவம்!

இறைச்சி கடையில் தீபாவளி போனஸ் தகராறு

இறைச்சி கடையில் தீபாவளி போனஸ் தகராறு

இறைச்சி கடையில் தீபாவளி போனஸாக இறைச்சி கேட்டு இளைஞர்கள் தகராறு செய்தனர். கத்தியுடன் வந்து மிரட்டும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம், இடங்கணசாலை கே. கே. நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி மஞ்சு (வயது 30). இவர் கே. கே. நகர், மின்சார அலுவலகம் எதிரே கறிக்கடை  நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் தீபாவளியை முன்னிட்டு கடை திறந்து வியாபாரம் செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் மோகன் மற்றும்  சில இளைஞர்கள் கறிக்கடைக்கு வந்து தீபாவளி போனஸாக கறி கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதற்கு அந்த பெண்மணி  நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம் எனவும், போனஸாக தர முடியாது எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாலையில் குடிபோதையில் வந்து கடையில் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டிக் கேட்ட மஞ்சுவை, மோகன் அங்குள்ள கத்தியை எடுத்து கையை குத்தி உள்ளார். மேலும், அவரது கடை அருகில் இருந்த  வீட்டின் கண்ணாடியை உடைத்துள்ளனர். பிரச்சனை குறித்து தட்டி கேட்ட மஞ்சுவின் கணவர் முருகேசனின் பைக்கை உடைத்துள்ளனர்.

மேலும், கடையில் இருந்த இவர்களது மகன் தருணையை (வயது 8) எட்டி உதைத்ததில் படுகாயம் அடைந்துள்ளார். இதில் தருண் சேலம் அரசு மருத்துவமனையிலும், மஞ்சு எடப்பாடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also see... சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்த்தால் பார்வை இழக்க நேரிடும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இதனிடையே கத்தியுடன் வந்து மிரட்டும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மகுடஞ்சாவடி காவல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Diwali festival, Meat, Salem