ஹோம் /நியூஸ் /சேலம் /

நாட்டு துப்பாக்கிகளுடன் காட்டில் சுற்றித்திரிந்த இளைஞர்.. சேலத்தில் தட்டி தூக்கிய போலீசார்..

நாட்டு துப்பாக்கிகளுடன் காட்டில் சுற்றித்திரிந்த இளைஞர்.. சேலத்தில் தட்டி தூக்கிய போலீசார்..

கைதான இளைஞர்

கைதான இளைஞர்

Crime News : சேலம்  மாவட்டம் கெங்கவல்லி அருகே உரிமமின்றி நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் உள்ளது. இந்த ஊரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள எட்டிமரத்து கருப்பு கோவில் அருகே வனப்பகுதியில் இளைஞர் ஒருவர் 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிவதாக கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கெங்கவல்லி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டவுடன் அந்த இளைஞர் தப்பியோட முயன்றார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை  மேற்கொண்டனர்.

காட்டில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கிருஷ்ணாபுரம் கிராமம் கண்ணன் தெருவை சேர்ந்த  சிவா(24) என்பதும், அவர் உரிமம் இன்றி 2 நாட்டு துப்பாக்கிகள்  வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிவாவை கைது  செய்த போலீசார் அவரிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர்  மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Local News, Salem