Home /News /salem /

திருமணம் ஆகாத விரக்தியில் தீக்குளித்த நபர் உயிரிழப்பு - சேலதத்தில் சோக சம்பவம்

திருமணம் ஆகாத விரக்தியில் தீக்குளித்த நபர் உயிரிழப்பு - சேலதத்தில் சோக சம்பவம்

தற்கொலை செய்துக்கொண்டவர்

தற்கொலை செய்துக்கொண்டவர்

Salem | சேலம் அருகே திருமணமாகாத விரக்தியில் நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
    சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி அருகே உள்ளது வெங்கடேசபுரம், இந்த பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களாக கோவையில் உள்ள தனியார் கண்ணாடி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது பெற்றோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.
    இதனால் மோகனசுந்தரம் சேலத்தில் உள்ள உறவினர் ரகுநாதன் என்பவர் வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் கோவையில் இருந்து மோகனசுந்தரம் சேலம் வந்தார். பின்னர் அவர் கோவில் கும்பாபிஷேகங்களுக்கு சென்று விட்டு வீட்டில் இருந்தார், வியாழன் மாலை திடீரென மோகனசுந்தரம் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மோகனசுந்தரத்தின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also see...மதுகுடிக்க பணம் தராத தாயை கொன்ற மகன் கைது

    மோகனசுந்தரம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும்  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மோகனசுந்தரத்தின் உறவினர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Commit suicide, Crime News, Marriage, Salem

    அடுத்த செய்தி