Home /News /salem /

கர்ப்பமான காதலி.. திருமணம் முடித்து கருக்கலைப்பு செய்து ஏமாற்றிய காதலன் - ஆத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

கர்ப்பமான காதலி.. திருமணம் முடித்து கருக்கலைப்பு செய்து ஏமாற்றிய காதலன் - ஆத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

ஆத்தூர் - கருக்கலைப்பு

ஆத்தூர் - கருக்கலைப்பு

Attur | ஆத்தூர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்  பெண்ணிற்கு கருகலைப்பு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  உள்ள தாண்டவராயபுரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( எ ) சூர்யா (வயது 22 ).  திருமண பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலர்களான இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன்காரணமாக அந்தப்பெண் கர்ப்பமடைந்துள்ளனர். தான் கர்ப்பமான விவரத்தை தன் காதலனிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு காதலனை அந்தப்பெண் வற்புறுத்தியுள்ளார். காதலியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணன் அவரை திருமணம் செய்துக்கொண்டார், திருமணத்துக்கு பின்னர் அந்தப்பெண்ணை வற்புறுத்தி கருவை கலைக்க வைத்துள்ளார். சிகிச்சை முடிந்து வந்த நிலையில் அந்தப்பெண்ணை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தாய் வீட்டிற்கு சென்ற பின்னர் கிருஷ்ணன் அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.  தன்னுடன் குடும்பம் நடந்த அழைத்தபோது கிருஷ்ணன் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

Also see... சென்னையில் இன்று மெகா வேலைவாய்ப்பு முகாம்..

அந்தப்புகாரில் தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தன்னை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணனை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Abortion, Love marriage, Pregnancy, Salem

அடுத்த செய்தி