Home /News /salem /

ஏற்காடு வனப்பகுதியில் வெட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட மரங்கள் - கைது நடவடிக்கையில் வனத்துறை

ஏற்காடு வனப்பகுதியில் வெட்டப்பட்ட 200க்கும் மேற்பட்ட மரங்கள் - கைது நடவடிக்கையில் வனத்துறை

பொதுமக்கள் சாலைமறியல்

பொதுமக்கள் சாலைமறியல்

கடந்த ஜூன் மாதம் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி பாதை அமைக்கும் பணி நடந்தது. இதற்கு வனத்துறையினர் உடந்தையாக இருந்ததாகவும், இதற்காக மக்களிடம் பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Yercaud | Salem
    ஏற்காடு வனப்பகுதியில் பாதை அமைப்பதற்காக மரங்களை வெட்டியவர்களை போலீசார் கைது செய்தனர். 

    சேலம் மாவட்டம் ஏற்காடு அரங்கம் பகுதியை ஒட்டியுள்ள சேர்வராயன் வடக்கு வனத்துறை காப்பு காடு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி பாதை அமைக்கும் பணி நடந்தது. இதற்கு வனத்துறையினர் உடந்தையாக இருந்ததாகவும், இதற்காக மக்களிடம் பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி வனவர்கள் சென்னகிருஷ்ணன், ராகுல் மற்றும் பொன்னுசாமி ஆகியோரிடம் விசாரித்து அதன் அறிக்கை மண்டல வன பாதுகாவலர் பெரியசாமியிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து  வனசரக அலுவலர் உட்பட நான்கு பேருக்கு கோட்ட வன அலுவலர் கௌதம் கடந்த 1ம் தேதி  குற்றத்தாள் வழங்கினார். அதனை தொடர்ந்து  அப்போது பணியில்  இருந்த காட் குமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    அதன் பின்னர் வனப்பகுதியில் சாலை அமைக்க மரம் வெட்டியதாக அரங்கம் பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அரங்கம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(30), மகேந்திரன்(30) மற்றும் புஷ்பநாதன்(30) ஆகியோரை நேற்று வனத்துறையினர் கைது செய்தனர்.

    ALSO READ | அதிரடி கட்டண உயர்வு.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் 26ம் தேதி அமைச்சர் ஆலோசனை

    இந்த தகவல் அறிந்த அரங்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்,  3 பேரை கைது செய்ததை கண்டித்து ஏற்காடு குப்பனூர் சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் நேற்று மாலை 4 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஏற்காடு காவல் ஆணையாளர் செந்தில்ராஜ் மோகன் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பின்னர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வேல்முருகன், புஸ்பநாதன், மகேந்திரன் ஆகியோர் ஜாமீனில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சாலை மறியலால் குப்பனூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Arrest, Forest, Salem, Yercaud Constituency

    அடுத்த செய்தி