முகப்பு /செய்தி /சேலம் / காவல் நிலையத்தில் தொடங்கிய உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி...

காவல் நிலையத்தில் தொடங்கிய உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி...

சேலம் - உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு பேரணி

சேலம் - உலக தாய்ப்பால் வாரம் விழிப்புணர்வு பேரணி

World Breastfeeding Week awareness rally in salem | உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சேலத்தில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் பொருட்டும் குழந்தைகளின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வார தினம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக  சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை காவல் ஆய்வாளர் அம்சவள்ளி கொடியசைத்து துவக்கி வைத்தார். காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி பேரூராட்சி அலுவலகம் சந்தைப்பேட்டை எஸ் பாலம் வீரபாண்டி வழியாக மீண்டும் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

Also see... இஸ்ரோ செல்லும் மதுரை அரசு பள்ளி மாணவிகள்.. அமைச்சர் பாராட்டு

இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு தாய்ப்பால் வார விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

First published:

Tags: Breast cancer awerness month, Salem, World breastfeeding week