ஹோம் /நியூஸ் /சேலம் /

வீட்டில் மர்மமான முறையில் இளம்பெண் மரணம் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

வீட்டில் மர்மமான முறையில் இளம்பெண் மரணம் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

உயிரிழந்த பெண்

உயிரிழந்த பெண்

Salem News : சேலம் மாவட்டத்தில் இளம்பெண் மர்மமான உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  உள்ள கல்லாநத்தம்  கிராமத்தை சேர்ந்தவர்  மணிமாறன் இவரது  மனைவி  சரண்யா (வயது 31). இவர்களுக்கு  ஐந்து வயதில்  ஒரு பெண்  குழந்தையும்  மூன்று  வயதில்  ஒரு ஆண்  குழந்தையும் உள்ளது. மணிமாறன்  கூலித் தொழில்  செய்து  வரும்  நிலையில்  கணவன் மனைவிக்கு இடையே  அடிக்கடி குடும்பத்தகராறு  ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின்  கதவு  வெகு நேரமாகியும்  திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த  அக்கம்  பக்கத்தினர் வீட்டினுள்  சென்று  பார்த்தபோது சரண்யா  மர்மமான  முறையில்  உயிரிழந்து கிடந்துள்ளார்.

Also Read: சீல் இடப்பட்ட கவரில் அறிக்கை.. 12 பேரிடம் உண்மையை கண்டறியும் சோதனை.. தீவிரமடையும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை!

இதுகுறித்து  சரண்யாவின்  உறவினர்கள்  மற்றும்  அவரது பெற்றோர்கள் ஆத்தூர்  ஊரக  காவல் நிலையத்திற்கு தகவல்  அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  ஊரக போலீசார்  சரண்யாவின்  சடலத்தை கைப்பற்றி  பிரேத  பரிசோதனைக்காக  சேலம்  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி  வைத்தனர். தொடர்ந்து  இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து கொலையா ? தற்கொலையா ? என போலீசார்  விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Murder, Salem, Tamil News