Home /News /salem /

ஏற்காட்டில் அரசு பேருந்தில் மோதிய காட்டெருமை... அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்!

ஏற்காட்டில் அரசு பேருந்தில் மோதிய காட்டெருமை... அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்!

அரசு பேருந்தில் மோதிய காட்டெருமை

அரசு பேருந்தில் மோதிய காட்டெருமை

Salem : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு பேருந்தில் காட்டெருமை மோதிய நிலையில், பேருந்தில் சென்ற 20 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று  இரவு  9 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று, சுமார் 20 பயணிகளுடன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் செந்தில்குமார் இயக்கி சென்றுள்ளார்.

பேருந்து ஏற்காடு நியூ டவுன் அருகில் உள்ள  தனியார் எஸ்டேட் அருகில் சென்று கொண்டிருந்த போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டெருமை ஒன்று சாலையின் குறுக்கே ஓடியுள்ளது. அப்போது அந்த காட்டெருமை பேருந்தின் முன் பகுதியில் மோதியுள்ளது.

அதை கண்ட ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தியதால், அப்போது காட்டெருமை வேகமாக ஓடி மீண்டும் எஸ்டேட்டிற்குள் சென்று விட்டது. காட்டெருமை மோதியதில் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்தது மற்றும் கண்ணாடி உடைந்து நொருங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 20 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினார். இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாவிட்டாலும், வன உயிரினங்களை வனப் பகுதிக்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என பேருந்தில் இருந்த பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Must Read : அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - தனித் தீர்மானம் இன்று இறுதி செய்ய வாய்ப்பு

இந்நிலையில், மலைப்பாதையில் பேருந்தை சாதுர்யமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Accident, Govt Bus, Salem, Wild Animal

அடுத்த செய்தி