முகப்பு /செய்தி /Salem / எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை

எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

Periyar University : சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் எது தாழ்ந்த சாதி என எழுப்பப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.ஏ. வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், சாதி பற்றி சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நான்கு சாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அதில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது.  இது சாதிய பாகுபாடு கருத்தை ஊக்குவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த வினாத்தாளில் மஹர், நாடார், ஈழவர், அரிஜன் ஆகிய சமூக பிரிவுகளை குறிப்பிட்டு இவற்றுள் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சுதந்திர போராட்ட இயக்கங்கள் 1880ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டு வரை  என்கிற தலைப்பில் எம்.ஏ.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வில் இந்த கேள்வி இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியார் பெயரில் இயங்கும் இப்பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்கிற அடிப்படையில் சாதிகளை குறிப்பிட்டு கேள்வி தமிழகத்தில் கல்வி நிலையங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஏற்படக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது பெரியார் பல்கலைக்கழக  விவாதத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து துணைவேந்தரிடம் நாம் தொடர்பு கொண்டு  விளக்கம் கேட்டபோது, வினாத்தாள்கள் வெளிகல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலமாக தயாரிக்கப்படுகின்றன. பினாத்தல்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படித்து பார்ப்பதற்கான வழக்கம் இல்லை இதனால் இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்கலாம்.

Must Read : உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை திடீர் சந்திப்பு

இதுவரை எங்கள் கவனத்திற்கு வரவில்லை இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த பாடத்திற்கு மறு தேர்வு நடத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

First published:

Tags: Periyar University, Salem