ஹோம் /நியூஸ் /சேலம் /

குழந்தைகளுக்கு சுகர்.. நீர்த்தேக்கத்தில் மிதந்த 4 உடல்கள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

குழந்தைகளுக்கு சுகர்.. நீர்த்தேக்கத்தில் மிதந்த 4 உடல்கள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்கொலை செய்துக் கொண்டவர்கள்

தற்கொலை செய்துக் கொண்டவர்கள்

salem Family suicide | மேட்டூர் அருகே சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் இருந்ததால் குடும்பமே ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடகா எல்லையான அடிப்பாளாறு பகுதியில் உள்ள காவிரி நீர் தேக்கத்தில் நான்கு சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் கொளத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல்துறையினர் சடலம் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்த தொலைபேசியில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனி பகுதி சேர்ந்தவர் யுவராஜ், அவரது மனைவி பான்விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, மற்றும் அக்சரா என்பது தெரிய வந்தது. மேலும் யுவராஜின் மூத்த மகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக நீரழிவு நோய் பாதிப்பு இருந்து வந்ததாகவும், இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவரது இளைய மகளுக்கும் நேற்று முன்தினம் பரிசோதனை செய்ததில் அவருக்கும் நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது.

இதனால் மணமுடைந்த யுவராஜ், பான்விழி தம்பதிகள் தனது இரண்டு மகள்களையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மேட்டூர் அருகே உள்ள தமிழக கர்நாடக எல்லையான அடிப்பாளாறு காவேரி ஆற்றில் தனது இரண்டு மகள்களையும் தள்ளிவிட்டு தம்பதிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிய வந்தது. நீரிழிவு நோயால் பாதித்த இரண்டு மகள்களின் பரிதாப நிலையை பார்க்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் சடலமாக கிடக்கும் நால்வரையும் மீட்க ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல்துறையினரும் சென்னம்பட்டி மற்றும் மேட்டூர் வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்

First published:

Tags: Commit suicide, Diabetics, Family, Salem