ஹோம் /நியூஸ் /சேலம் /

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியே  தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்...

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியே  தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்...

Salem | கடந்த 19 நாட்களாக மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உபரி நீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி, அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் தொடர்ந்து வந்ததால் இந்த மாதம் 12ஆம் தேதி 16 கண் மதகு வழியே மீண்டும்  தண்ணீர் திறக்கப்பட்டது . முதலில்  வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.  படிப்படியாக ஒரு லட்சத்து 95 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது .

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து இரண்டு நாட்களாக குறைய தொடங்கியது. இன்று மேலும் சரிந்தது. இதனால் 16 கண் மதகு வழியே தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதுவரை மேட்டூர் அணைக்கு இந்த நீர்ப்பாசன ஆண்டில் 590 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. 574 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

Also see...காற்று மாசுவால் ஆண்களை விட பெண்களுக்கே நுரையீரல் பாதிப்பு அதிகம்

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியில் உள்ளது. அணைக்கான நீர் திறப்பு விநாடிக்கு 21,500 கன அடி வீதமாக உள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Mettur Dam, Salem, Water