Home /News /salem /

அதிமுகவை அழிக்க முயற்சி... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சசிகலா பேச்சு

அதிமுகவை அழிக்க முயற்சி... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சசிகலா பேச்சு

சசிகலா

சசிகலா

Attur | அதிமுகவை அழிக்க நினைப்போருக்கு இடம் கொடுக்காமல், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தொண்டர்களை வி.கே.சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Attur, India
புரட்சி பயணம்  என்ற  தலைப்பில்  இரண்டு  நாட்கள்  சுற்றுப் பயணமாக சேலம்  மாவட்டத்திற்கு  வருகை தந்த வி.கே.சசிகலாவிற்கு மாவட்ட  எல்லையான தலைவாசலில்  அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு  அளித்தனர். இதனை தொடர்ந்து ஆத்தூர் மணிக்கூண்டு அருகில் வேனில் இருந்தபடியே  பொதுமக்களிடையே சசிகலா  பேசினார். 

அப்போது, ‘ சேலம் மாவட்டத்தில் மக்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த அதிமுக  ஆட்சிக்காலம் தான் மக்களுக்கான ஆட்சியாக பொற்காலமாக  இருந்தது. அப்போது சத்துணவு  திட்டம், மகளிர்க்கான திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாக அதிமுக ஆட்சி கால சாதனைகளை பட்டியலிட்டார்.

மேலும்  69%  சதவீத  இட  ஒதுக்கீடு கொண்டு வந்தவர்  ஜெயலலிதா  என்றும் இறுதி மூச்சு வரை மக்களுக்கான திட்டங்களை கொண்டு  வந்தார் என்றும் கூறிய அவர்,  அதிமுக  ஆட்சி  காலத்தில்  கொண்டு  வந்த  மக்கள்  நலத்திட்டத்தை தொடர்ந்து  செயல்படுத்தினாலே  தமிழகம் முன்னேற்றம் பெறும் என்றும் எந்த ஒரு  சூழ்நிலையிலும்  எவ்வளவு வேற்றுமை இருந்தாலும் அவற்றை  சரி செய்து தொடர்ந்து  இயக்கத்தை வலுபடுத்தாமல் ஓயமாட்டேன் என்றும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் மறைவுக்குப் பின் இக்கட்டான  சூழ்நிலையில் அதிமுகவை  மீட்டுள்ளோம். எனவே அன்றைய  காலத்தில் நடந்ததை  நிர்வாகிகள் நினைத்து பார்த்தால் தற்போதைய பிரச்சனை சரியாகி விடும். மேலும் 2024ல் நடைபெறும் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பான வெற்றி  பெறுவோம். என் அக்கா எனதருகிலிருந்து  நடப்பவை  எல்லாம் பார்த்து  கொண்டுதான்  இருக்கிறார்’ என்றும் பேசினார்.

திமுக,வினர்  அதிமுகவை  அழிக்க  முயற்சி  செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய சசிகலா, திமுக விற்கு நாம் இடம்  கொடுத்து விடக்கூடாது  என்பதற்காக  தான்  பொறுமையாக இருக்கிறேன்.  மேலும்  ஆட்சியை  காப்பாற்ற  உங்கள்  பகுதியை  சேர்ந்த  கழக நிர்வாகியை  முதல்வர்  ஆக்கினேன். இன்றைய  நிலையை  கட்சி நிர்வாகிகள் புரிந்து  ஒன்றிணைந்து  செயல்பட  வேண்டும். நடந்தவை  நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை  நல்லவை யாக  இருக்கட்டும் என்றும் பேசினார்.

Also see... பலூனோடு பறந்த சீன நபர் - 2 நாட்கள் பின்பு ஒரு வழியாக மீட்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்று  இதுவரை  எந்த  திட்டமும்  நிறைவேற்ற வில்லை. மேடையில் மட்டும் வசனங்கள் பேசி  வருகின்றனர் என்று விமர்சித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி  உள்ளது. மாநகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. திரைப்படத்துறையில் ஆளும் கட்சியினர், குடும்பத்தினர் தலையீடு அதிகரித்துள்ளது. கல்லூரி, பள்ளிகளுக்கிடையே  போதை  பொருள் அதிகாரிள்ளது. பால், மின்சாரம் வீட்டு வரிகளை உயர்த்தி மக்களை வேதனைக்கு உள்ளாக்கும் திமுக, அரசு பேருந்து கட்டணத்தையும் உயர்த்த போவதாக தெரிகிறது என்று குற்றம்சாட்டினார்.

 

 

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, Attur Constituency, Salem, Sasikala

அடுத்த செய்தி