Home /News /salem /

சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்

சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

Salem | சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கால்நடைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
    கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை திமுக அரசு எதிர்க்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அருகே பூலாவரி கிராமத்தில் ஆடு, மாடுகளுடன் திரண்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியின் போது 8 வழிச்சாலை திட்டத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அந்த திட்டம் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததால் திமுகவுக்கு வாக்களித்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஏற்கனவே நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில் பேசிய போது, சர்ச்சைக்குரிய சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று  தெரிவித்திருந்தார்.

    Also see... அமைச்சர் பிடிஆரை சந்திக்க அன்பில் மகேஷ் திட்டம்...

    மேலும் எட்டுவழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து ஆறுவழிச்சாலையாக மாற்றினால்கூட, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு இருக்கும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், விவசாயிகளின் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்று தர்ணாவில் ஈடுப்பட்ட கிராம மக்கள் கூறினார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Protest, Salem

    அடுத்த செய்தி