Home /News /salem /

குகையில் இருந்தாலும் சிங்கம்.. சிங்கம் தான் - ஆத்தூர் ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன் பேச்சு

குகையில் இருந்தாலும் சிங்கம்.. சிங்கம் தான் - ஆத்தூர் ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன் பேச்சு

விஜய் பிரபாகரன்

விஜய் பிரபாகரன்

தேமுதிக  தலைவர்  உடல் நலம்  குன்றிய  காரணத்தால்  அதிகம் வெளியில் வரவில்லை எனினும்  அவர்கள்  வளர்ப்பு  நாங்கள்  தொடர்ந்து  மக்களுக்கு நல்லது  செய்வோம் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சேலம்- சென்னை  செல்லும் தேசிய நெடுஞ்சாலை வீடியோ  கேம்  போல்  வளைந்து  நெளிந்து  உள்ளதாக  ஆத்தூரில்  தேமுதிக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  பழைய  பேருந்து  நிலையம்  அருகில்  சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக  சார்பில்  நதிநீர்  இணைப்பு , ஆத்தூரை  தலைமை இடமாக கொண்டு  புதிய  மாவட்டம் அமைக்க வேண்டும் எனவும் சேலம் - சென்னை  செல்லும் இரண்டு வழிச்சாலைகளை நான்கு  வழிச்சாலையாக மாற்ற  வேண்டும்  என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தியும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ,ஆர், இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு  அழைப்பாளராக  தேமுதிக  கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின்  மகன்  விஜய பிரபாகரன்  கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது பேசிய விஜய பிரபாகரன் ஆசிரியர்  தினத்தில் ஆசிரியர்களுக்கு  வாழ்த்துக்களை  தெரிவித்து கொண்டதோடு தமிழகத்தில் தற்போது  போதை  பொருட்கள் , கஞ்சா  உள்ளிட்ட பொருட்கள் அதிக  அளவில் அதிகரித்துள்ளது, இதனை  தடுக்க  ஆசிரியர்கள்  மாணவர்களை  நல்வழிப்படுத்த வேண்டுமென்று தெரிவித்தார்.

மேலும்,  சென்னையிலிருந்து  வரும்  வழியில் கள்ளக்குறிச்சி  கனியாமூர்  பள்ளியை  பார்த்தேன். அனைத்து  அரசியல் கட்சியினரும்  அந்த  கல்லூரி  மாணவி  இறப்பிற்கு  நியாயம்  கேட்டு அவரது  குடும்பத்தினருக்கு  ஆறுதல்  தெரிவித்தனர்  என்றார்.

மேலும்  திமுக  எதிர்க்கட்சியாக இருந்த போது  நீட்  தேர்வு  விவகாரத்தில்  உயிரிழந்த  அனிதா  மரணத்தை  அரசியலாக்கினர், திமுக  தேர்தல்  அறிக்கையில்  அளித்த  வாக்குறுதிகள்  எதுவும்  நிறைவேற்றப் படவில்லையென்றும் அண்ணன்  உதயநிதி  ஸ்டாலின் ஒரு  செங்கலை  வைத்து  கடந்த  தேர்தலில்  அரசியல்  செய்தார் , திமுக அரசு பொறுப்பேற்றவுடன்  ஆயிரம்  தடுப்பணைகள் கட்டுவதாக  சொன்னார்கள், இதுவரை ஒரு  செங்கலையாவது  நட்டு  வைத்துள்ளார்களா என  கேள்வி எழுப்பினார்.

தேமுதிக  தலைவர்  உடல் நலம்  குன்றிய  காரணத்தால்  அதிகம் வெளியில் வரவில்லை எனினும்  அவர்கள்  வளர்ப்பு  நாங்கள்  தொடர்ந்து  மக்களுக்கு நல்லது  செய்வோம். குகைக்குள்  இருந்தாலும்  சிங்கம்  ,சிங்கம்  தான் என்றார். மேட்டூர்  உபரி நீரை  சேலம்  மாவட்டத்தில்  உள்ள  நதிகளுக்கு  இணைக்க வேண்டும். சேலம் - சென்னை  தேசிய  நெடுஞ்சாலை  நான்கு வழிச்சாலையாக  அமையும்  என்று  தெரிவித்து விட்டு  பல  இடங்களில்  இரண்டு வழிச் சாலையாகவே  உள்ளது ,இதனால்  விபத்துக்கள்  அடிக்கடி  நடக்கிறது. இச்சாலை  வீடியோ  கேம்  போல  வளைந்து  நெளிந்து  காணப்படுகிறது நடுவில் ஒருகுச்சியைவைத்துள்ளனர் , இதனால்  வாகன  ஓட்டிகள்  கடும்  சிரமத்திற்கு ஆளாகி  வருகின்றனர் , எனவே  இச்சாலையை  உடனடியாக  நான்கு  வழிச் சாலையாக  மாற்ற  வேண்டும். இதற்கு  மத்திய ,  மாநில  அரசுகள்  உடனடியாக நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  வலியுறுத்தினார்.
Published by:Raj Kumar
First published:

Tags: DMDK, DMK, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி