ஹோம் /நியூஸ் /சேலம் /

டாஸ்மாக் கடையை மூட ஊழியர்களின் காலில் விழுந்த எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ

டாஸ்மாக் கடையை மூட ஊழியர்களின் காலில் விழுந்த எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ

காலில் விழுந்த எம்.எல்.ஏ

காலில் விழுந்த எம்.எல்.ஏ

Salem News | டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் ஒரு மாதத்தில் இந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டி பகுதியில் அரசு டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அதிக குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் அரசு பள்ளி, வார சந்தை அம்மா பூங்கா, உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு போதை ஆசாமிகளால் அவ்வப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர்.

இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 7ஆம் தேதி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் (பாமக) அவர்கள் தலைமையில்  பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார் அப்பொழுது டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் ஒரு மாதத்தில் இந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால் அப்போது பூட்டு போடும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்

இதையும் படிக்க : உயர்வகுப்பு இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல் - ராமதாஸ் கண்டனம்

இந்த நிலையில் ஒரு மாதம் கடந்தும் டாஸ்மார்க் கடை இடமாற்றம் செய்யாமல் அதே பகுதியில் செயல்பட்டு வந்தது இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் நேற்றுடன் மது கடை மூடுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதாகவும் தொடர்ந்து நாளை மதுக்கடையை திறக்க கூடாது என அரசு மதுபான கடை ஊழியர்களிடம் கூறினார்.

மேலும் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து தயவு செய்து கடையை மூடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து  பொதுமக்கள் கலைந்து சென்றனர் மது கடையை மூடக்கோரி சட்டமன்ற உறுப்பினர் டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Raj Kumar
First published:

Tags: MLA, Salem, Tasmac