Home /News /salem /

விவசாய கடன் மோசடி... சேலத்தில் கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு கலைப்பு

விவசாய கடன் மோசடி... சேலத்தில் கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு கலைப்பு

சேலத்தில் கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு கலைப்பு...

சேலத்தில் கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு கலைப்பு...

Salem | சேலம் அருகே போலியாக ரூ.3.63 கோடி பயிர்க்கடன் வழங்கி நிதியிழப்பை ஏற்படுத்திய வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழுவை கலைத்து கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது . இச்சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது . அத்துடன் உரமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் நிலுவையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது .

இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர் . அதில் , 113 விவசாயிகளுக்கு விவசாய கடன் திட்டம் மூலம் பயிர்க்கடன் 3.63 கோடி ரூபாய் வழங்கியதாக கணக்கு எழுதப்பட்டு , சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் நிதியிழப்பு ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. மேலும் விவசாயிகளுக்கு போலியாக கடன் வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அத்துடன் உரம் விற்பனையிலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது .

இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாக குழு விளக்கம் அளிக்க கூட்டுறவு அதிகாரிகள் கேட்டிருந்தனர். இதையடுத்து நிர்வாக குழுவினர் அளித்த விளக்கம் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. இதையடுத்து நிர்வாககுழுவை 88 ( 1 ) ன் கீழ் கலைத்து கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



இதே போல் , கருப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கேட்கும் தொகையை விட குறைவாக கடன் வழங்கப்படுவதாகவும் , சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் சரிவர செயல்படவில்லை எனவும் புகார் எழுந்தது . இதன்பேரில் கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர் . இதில் புகார்கள் உண்மை என்பது தெரியவந்தது . இதற்கு கூட்டுறவு சங்க நிர்வாக குழுதான் காரணம் என்பதும் தெரியவந்தது.

Also see... தகுதித்தேர்வில் தோல்வி.. திருமணத்தில் சிக்கல் - விரக்தியில் பட்டதாரி இளைஞர் தற்கொலை

இதுதொடர்பாக நிர்வாக குழு உறுப்பினர்கள் விளக்கம் அளித்தனர் . அவர்களின் விளக்கம் உரிய முறையில் இல்லாததால் அதனை கூட்டுறவு அதிகாரிகள் நிராகரித்தனர். இதைதொடர்ந்து சங்கத்தின் நிர்வாக குழுவானது, சங்கம் நலம் கருதியும் , உறுப்பினர்கள் நலன் கருதியும் சங்கத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு தீர்வு காணும் பொருட்டு 88 ( 1 ) விதியின் கீழ் சங்க நிர்வாக குழுவை கலைத்து கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் .

சேலம் மாவட்டத்தில் வெள்ளரிவெள்ளி மற்றும் கருப்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cheating case, Crime News, Salem

அடுத்த செய்தி