Home /News /salem /

உயிருடன் உள்ள மூதாட்டிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர்!

உயிருடன் உள்ள மூதாட்டிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர்!

மூதாட்டி பெரியம்மாள்

மூதாட்டி பெரியம்மாள்

Salem : சேலத்தில், உயிருடன் இருக்கும் மூதாட்டிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி  மூதாட்டியின் மகன் நான்கு ஆண்டுகளாக போராடிவருகிறார்.

வருவாய் துறையின் கீழ் பெறப்படும் பல்வேறு சான்றிதழ்களை நியாமான முறையில் பெறுவதற்கே, கிராம நிர்வாக அலுவலர்கள் அலையவிடுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், உயிருடன் உள்ள ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ் வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே இராஜபாளையம் கிராமத்தைச் சார்ந்தவர் பெரியம்மாள் (வயது 78). இவருக்கு இரண்டு மகன்கள், இருவருக்கும் திருமணமாகி  அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மூதாட்டி பெரியம்மாளுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை , வாகாளர் அடையாள அட்டை அனைத்திலும் இராஜாபாளையும் கிராமத்தின் விலாசம் உள்ளது . சமீபத்தில்  கூட இருப்பிடச் சான்று பெற்றுள்ள பெரியம்மாள், தற்போது வரை விதவைக்கான உதவி பணமும் பெற்று வருகிறார்.

இதனிடையே அதே ஊரைச் சார்ந்த இராஜேந்திரன் என்பவருக்கும், சேலம்  திருவாகவுண்டனூர் அய்யர்தெரு பகுதியைச் சார்ந்த வேலுமணி என்பவருக்கும் இராஜாபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ராஜேந்திரனுக்கு, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் கோர்ட்டில் வழங்கப்பட்டுள்ளது .

அந்த நகல்களில் பெரியம்மாள் என்பவர் இறந்துவிட்டதாக சான்றளிப்பதாக 06.07.2013 -ல் அப்போதைய சென்னகிரி கிராம நிர்வாக அலுவலர் கற்பகவள்ளி கையொப்பமிட்ட சான்று ஒன்றை, சேலம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்  வழக்கில் சேர்த்துள்ளது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உயிருடன் உள்ள மூதாட்டிக்கு இறப்புச் சான்றிதழ்


உயிருடன் உள்ள தனது தாய்க்கு  இறந்துவிட்டார் என சான்று வழங்கிய அப்போதைய சென்னகிரி கிராம நிர்வாக அலுவலர் கற்பகவள்ளி என்பவர் மீதும் உடனடியாக விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அதற்கு உறுதுணையாக இருந்த வேலுமணி என்பவர் மீதும் மற்றும் வழக்கில் சேர்த்த சேலம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மீதும் கடுமையாள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து போராடி வருகிறார், பெரியம்மாள் மகன் மணிமோகன்.

Must Read :  கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை

இந்த வழக்கில், இன்னும் பல தவறான தகவல்களை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு காவல் துறை ஆய்வாளர் பதிவு செய்துள்ளார் என்றும், அதனால் எனக்கு பாதிப்பு இல்லாதபோதும், என் தாய் இறந்தபின் இறப்பு சான்றிதழ் பெறுவதில் கூட சிக்கல் ஏற்பட உள்ளது. எப்படி இருப்பினும் உயிருடன் உள்ள எனது தாயை இறந்துவிட்டதாக கூறி சான்றிதழ் வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Published by:Suresh V
First published:

Tags: Fake certificate, Salem

அடுத்த செய்தி