ஹோம் /நியூஸ் /சேலம் /

கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு : சேலம் அருகே சோகம்!

கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு : சேலம் அருகே சோகம்!

நாளை பிறந்தநாள் கொண்டாடம்... கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு

நாளை பிறந்தநாள் கொண்டாடம்... கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய் உயிரிழப்பு...நாளை பிறந்தநாள் கொண்டாட இருந்த ஒரு வயது பெண் குழந்தையும் இறந்தது...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ளது மாசிநாய்க்கன்பட்டி.

இங்குள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30). விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி மீனா என்ற மனைவியும், சுபஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருந்தனர். வினோத் மாசி நாயக்கன்பட்டி வாத்தியார் காடு பகுதியில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து இங்கு விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் மீனா, குழந்தை சுபஸ்ரீயை தூக்கி கொண்டு வீட்டு அருகே உள்ள தரைமட்ட கிணறு பகுதியில் அமர்ந்து குழந்தைக்கு வேடிக்கை காண்பித்து கொண்டு சாப்பாடு ஊட்டி விட்டுள்ளார்.

அப்போது குழந்தை தவறி தரை மட்ட கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதை அறிந்த தாய் மீனா அதிர்ச்சடைந்து உடனே அவரும் கிணற்றில் குதித்து குழந்தையை காப்பாற்ற முயன்றார்.  ஆனால் சிறிது நேரத்தில் குழந்தையும் மீனாவும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

இதை அறிந்த உறவினர்கள் சிலர் கிணற்றில் குதித்து மீனா மற்றும் குழந்தையின் சடலங்களை மீட்டனர். பிறகு உறவினர்கள் இது குறித்து சேலம் அம்மாபேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Also see...மருந்துக்கழிவுகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும்..?

உடனே விரைந்து வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் மீனா மற்றும் குழந்தையின் சடலங்களை மீட்டு  உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு வயது பெண் குழந்தையான சுபஸ்ரீ க்கு நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில், தாய் மற்றும் குழந்தை இறந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Salem