Home /News /salem /

நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை வைத்து ஆபாச படம்... நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பெண்களை சீரழித்தவர் கைது

நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை வைத்து ஆபாச படம்... நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பெண்களை சீரழித்தவர் கைது

சினிமா வாய்ப்பு தருவதாக பெண்களிடம் மோசடி

சினிமா வாய்ப்பு தருவதாக பெண்களிடம் மோசடி

அலுவலகத்தில் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India
    சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செப்.1ஆம் தேதி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தான் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி வந்ததுள்ளார். அப்போது நண்பர் ஒருவர் கூறியதன் பேரில், சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த சினிமா கம்பெனிக்கு சென்றுள்ளார். அங்கு சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேல்சத்ரியன் (வயது 38), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திராநகரை சேர்ந்த ஜெயஜோதி (வயது23) என்ற பெண் ஆகியோர் இருந்துள்ளனர்.

    அதில் வேல்சத்திரியன் தன்னை இயக்குநர் எனவும், ஜெயஜோதி உதவியாளர் எனவும் அறிமுக படுத்திகொண்டதா தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும், தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை எனக்கூறவும் அவர்கள் அலுவலகத்தில் வேலைக்கு வைத்துக் கொண்ட நிலையில்,அதற்கு அவர்கள் சம்பளம் ஏதும் தரவில்லை. சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை ஆபாச படத்தில் நடிக்க இயக்குநர் வேல்சத்ரியன் வற்புறுத்திய நிலையில், அந்த பெண் வேலையை விட்டு நின்றுள்ளார்.

    இருவரும் அந்த பெண்ணின் செல்போனை பறித்து வைத்துள்ளனர். அந்த போனை வாங்கவும், வேலை பார்த்ததற்கு சம்பளம் பெறவும் அலுவலகத்திற்கு பெண் மீண்டும் சென்றுள்ளார். அங்கு என்னை வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோர் மிரட்டியதுடன், சில இளம்பெண்களை வைத்து அவர்கள் ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரில் புகாரில் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் அதிரடியாக அந்த சினிமா அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர்.

    அதில் அவர்கள், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பல இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து சீரழித்தது தெரியவந்தது. அந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சினிமாவில் நடிக்க வந்த இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்டுகள், லேப்டாப், கேமராக்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இயக்குநர் வேல்சத்ரியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், எடப்பாடியை சேர்ந்த வேல்சத்ரியன், கடந்த சில மாதங்களுக்கு முன் 'நோ' என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுப்பதாக அறிவித்து, அதில் நடிக்க நடிகைகள் தேர்வை நடத்தியுள்ளார். எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்று வந்த இளம்பெண்களிடம், ஆசை வார்த்தை கூறி மயக்கியிருக்கிறார். மேலும், அந்த இளம்பெண்களின் பெற்றோரிடமும் தான் எடுக்கும் படம் தேசிய விருதுக்கான படம். அதனால், நான் சொல்வது போல் எல்லாம் நடிக்க வேண்டும் எனக்கூறி அவர்களின் அனுமதியோடு அப்பெண்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கு : மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன - காவல்துறை

    முதலில் அந்த பெண்களை கிளாமராக நிற்க வைத்து படம் எடுப்பதும், பிறகு அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்துள்ளார். அப்போது நடிக்க கற்று கொடுப்பது போல், சில பெண்களை சீரழித்துள்ளார். சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர் என தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இயக்குநர் வேல்சத்ரியன், உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது கொலைமிரட்டல் விடுத்தல், ஆபாச படம் எடுத்த கணினி குற்றம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் இருவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Cinema, Crime News, Salem

    அடுத்த செய்தி