Home /News /salem /

ஏற்காட்டில் கொட்டி தீர்த்த கனமழை.. மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தம்

ஏற்காட்டில் கொட்டி தீர்த்த கனமழை.. மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தம்

ஏற்காட்டில் நிலச்சரிவு

ஏற்காட்டில் நிலச்சரிவு

Salem | தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த மழையினால் ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் மலைப்பாதையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நீர் வெள்ளம்போல் சாலையில் ஓடி வருகிறது.

இதனால் ஏற்காடு காவல் துறையினர் ஏற்காடு இருபதாவது கொண்டை ஊசி வளைவின் அருகில் பேரிகார்ட் அமைத்து ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். அதே போல் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள காவலர் சோதனை சாவடியிலும் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். இந்த வாகனங்களை ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Also see... கரூரில் ஜோராக நடக்கும் கஞ்சா பிசினஸ்.. காவல் துறை அதிரடி

அதனைத் தொடர்ந்து மலை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சரி செய்து வருகின்றனர். இதனால் இரவு முழுவதும் ஏற்காட்டிற்கான போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டது.



 

இதே போல் ஏற்காட்டில் பெய்த மழையின் காரணமாக சேலம் மாநகர், அஸ்தம்பட்டி மற்றும் நான்கு ரோடு கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் உள்ள ஓடையிலிருந்து நீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் நள்ளிரவு வெள்ளம் புகுந்தது மக்கள் அவதிக்குள்ளாகினர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Rainfall, Salem, Yercaud Constituency

அடுத்த செய்தி